Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: புவனேஸ்வர் குமார் பவுலிங்கில் பெரிய குறை இருக்கு.. இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்- அஸ்வின்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை தொடர்ந்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு வேகம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், அனுபவமிக்க புவனேஷ்வர் குமாருக்கு இது மற்றொரு கடினமான போட்டியாகவே அமைந்தது.

சில கட்டங்களில் அவர் நன்றாகப் பந்துவீசிய போதிலும், ஒட்டுமொத்தமாக அவரது திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் திருப்திகரமாக இல்லை என்று அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு வேகம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அஸ்வின், வேகத்தை அதிகரிக்காவிட்டால் அது அவருக்குப் பெரிய சவாலாக அமையும் என கூறியுள்ளார்.

Bhuvneshwar Kumar

இது குறித்து பேசிய அஸ்வின், "புவனேஷ்வரும் அர்ஷ்தீப் சிங்கும் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினர். ஆனால் புவனேஷ்வருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. சில ஓவர்களில் அவரால் பந்துவீச்சை சரியாகச் செயல்படுத்த முடியவில்லை. நான் எப்போதும் அவருக்கு ஆதரவாகவே இருந்துள்ளேன், அவர் மீண்டும் அணிக்கு வர வேண்டும் என்றே விரும்பினேன்."

IND vs NZ: இந்த நியூசிலாந்து வீரர், இந்தியாவுக்கு தலைவலியாக மாறி வருகிறார்.. இர்பான் பதான் வார்னிங்

IND vs NZ: இந்த நியூசிலாந்து வீரர், இந்தியாவுக்கு தலைவலியாக மாறி வருகிறார்.. இர்பான் பதான் வார்னிங்

"ஆனால், அவர் இதே வேகத்தில் பந்துவீசினால் அது அவருக்குக் கடினமாகிவிடும். இதுவே எனது கவலை. அவரிடம் திறமையும் பந்தை ஸ்விங் செய்யும் ஆற்றலும் உள்ளது. ஆனால் அவர் தனது வேகத்தை 134, 135, 136 கி.மீ அளவுக்கு உயர்த்த வேண்டும். அப்போதுதான் அவர் இன்னும் ஆபத்தான பந்துவீச்சாளராக மாறுவார். ஆனால் அது இப்போது நடக்கவில்லை" என்று கூறினார்.

இரண்டாவது டி20 போட்டியில் தனது முதல் ஓவரைச் சிறப்பாக வீசிய புவனேஷ்வர் குமார், ஒட்டுமொத்தமாகச் சோபிக்கத் தவறிவிட்டார். அவர் தனது ஓவர்களில் 12.5 என்ற எகானமி ரேட்டில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். முதல் போட்டியில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காத நிலையில், இரண்டாவது போட்டியில் 50 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ள புவனேஷ்வர் குமாரின் மீள்வருகை, எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. சில கட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய போதிலும், அணியின் வெற்றிக்குத் தேவையான தாக்கத்தை அவரால் இன்னும் ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும், இரண்டு போட்டிகளை மட்டுமே வைத்து அவரை உடனடியாக முடிவு செய்துவிடக் கூடாது என்றும், அவருக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

IND vs NZ: இந்த 23 வயது வீரர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது.. அப்படி ஒரு திறமை.. கையிப் பாராட்டு

Also Read

IND vs NZ: இந்த 23 வயது வீரர் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது.. அப்படி ஒரு திறமை.. கையிப் பாராட்டு

இருப்பினும், தற்போதைய இந்திய அணியில் நிலவும் கடுமையான போட்டிக்கு மத்தியில், புவனேஷ்வர் குமார் விரைவாகத் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வரவிருக்கும் போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்படாவிட்டால், இதுவே அவருக்குக் கிடைக்கும் கடைசித் தொடராக மாறக்கூடும். இந்திய அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் நீட்டிக்கவும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் கம்பேக் தர வேண்டியது அவசியமாகும்.

Story first published: Sunday, October 25, 2026, 14:57 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+