Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்த நியூசிலாந்து வீரர், இந்தியாவுக்கு தலைவலியாக மாறி வருகிறார்.. இர்பான் பதான் வார்னிங்

மும்பை: நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ், இந்தியாவுக்கு தலைவலியாக மாறி வருவதால் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வியூகங்களை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 180/5 ரன்கள் எடுத்தது. இதில் கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்ததன் மூலம், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Glenn Philips

இந்த தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், கிளென் பிலிப்ஸ் 152.00 சராசரி மற்றும் 183.13 ஸ்டிரைக் ரேட்டுடன் 152 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக விளங்குகிறார்.

IND vs NZ: நாங்கள் பல தவறுகளை செய்துவிட்டோம்.. இந்த 3 வீரர்களும் பிராமாதமாக ஆடினார்கள்-சாண்ட்னர்

IND vs NZ: நாங்கள் பல தவறுகளை செய்துவிட்டோம்.. இந்த 3 வீரர்களும் பிராமாதமாக ஆடினார்கள்-சாண்ட்னர்

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய இர்பான் பதான், கிளென் பிலிப்ஸ் இந்திய அணிக்கு ஒரு தலைவலியாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார். "பிலிப்ஸுக்கு எதிராக பிரின்ஸ் யாதவை இந்திய அணி அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அவரது பந்துவீச்சில் உள்ள மாற்றங்கள் பிலிப்ஸ் ஒரே வேகத்திற்குப் பழக்கப்படுவதைத் தடுக்கும்" என்று பதான் கூறினார்.

மேலும், பிலிப்ஸின் footwork பந்துவீச்சாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், "ஆஃப்-சைடில் ஃபீல்டிங் அமைக்கப்படும் போது, பிலிப்ஸ் தனது Front Foot-ஐ குறுக்கே நகர்த்தி ஆட முயல்கிறார். மாறாக, ஸ்டம்புகளை இலக்கு வைத்து பந்துவரும் என எதிர்பார்க்கும்போது, தனது Front Foot-ஐ விலக்கி ஆடத் தயாராகிறார். அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக அவர் அடித்த சிக்ஸர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பந்துவீச்சாளர்கள் அவரது இந்த நகர்வை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்றவாறு பந்தை மாற்றி வீசி அவரை ஏமாற்ற முடியும்" என்று விளக்கினார்.

இந்தியாவிற்கு எதிராக 17 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிளென் பிலிப்ஸ், 147.16 ஸ்டிரைக் ரேட்டுடன் 468 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடங்கும். அடுத்த போட்டியில் பிலிப்ஸின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால், இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முடியும் என்றும் பதான் நம்பிக்கை தெரிவித்தார்.

2வது டி20 போட்டியில் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார் குறித்தும் இர்பான் பதான் கருத்து தெரிவித்தார். புவனேஷ்வர் குமார் பந்தை சற்று ஃபுல்லர் லென்தில் வீச வேண்டும் என யோசனை கூறினார்.

IND vs NZ: திலக் வர்மா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்.. அடித்து சொன்ன இர்பான் பதான்

Also Read

IND vs NZ: திலக் வர்மா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்.. அடித்து சொன்ன இர்பான் பதான்

"அவர் தற்போது 7.5 மீட்டர் தூரத்தில் பந்தை லேண்ட் செய்கிறார். அதை 6.5 மீட்டருக்குக் கொண்டு வந்தால் ஆடுகளத்தில் இருந்து கூடுதல் ஸ்விங் மற்றும் உதவி கிடைக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி அக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை அன்று வெலிங்டனில் நடைபெறவுள்ளது.

Story first published: Sunday, October 25, 2026, 7:00 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+