Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: திலக் வர்மா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்.. அடித்து சொன்ன இர்பான் பதான்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இளம் வீரர் திலக் வர்மாவை இந்தியாவின் எதிர்கால கேப்டன் என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, 11-வது ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது 6-வது வீரராக திலக் வர்மா களமிறங்கினார்.

பின்னர் 31 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்பட்ட கடினமான சூழலிலும் பதற்றமின்றி விளையாடிய அவர், 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்து, ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

Tilak Varma

போட்டிக்கு பிறகு பேசிய இர்பான் பதான், "திலக் வர்மா என்று வரும்போது பல திறமை கொண்ட ஒரு வீரரே நினைவுக்கு வருகிறார். அவரது இரண்டு சதங்களும் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும்போது வந்தவை. ஆனால், இந்த அரைசதம் வரிசையின் கீழ் இறங்கி விளையாடும்போது கிடைத்துள்ளது. அவரது மன உறுதி என்னை எப்போதும் ஈர்த்துள்ளது."

IND vs NZ: இந்திய அணி 15 ஓவரிலேயே வென்று இருக்கலாம்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த மெகா தவறு</a><a class=" width="200" height="113">

IND vs NZ: இந்திய அணி 15 ஓவரிலேயே வென்று இருக்கலாம்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த மெகா தவறு

"எதிர்காலத்தில் திலக் வர்மா இந்திய அணியை வழிநடத்துவார். எங்கு விளையாடினாலும், ஒரு கேப்டனுக்குரிய மனநிலையுடன் செயல்படுவதால் அவர் அணியை வழிநடத்துவார். கடந்த போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்கி அவர் விரைவில் ஆட்டமிழந்தார். அந்தத் தோல்வியை ஒரே நாளில் மறந்து, உடனடியாக மீண்டு வந்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இது தானாக நடந்துவிடாது. திறமையைத் தாண்டி இதற்கு அதிக மன வலிமை தேவை. இதுவே அவரை முதல் 7 இடங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய அனுமதிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

இந்த போட்டியில் திலக் வர்மாவுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நமேன் தீர், 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். போட்டிக்குப் பிறகு பேசிய திலக் வர்மா, "பிட்ச் முந்தைய போட்டியை விட சற்று மெதுவாக இருந்தது. அதனால் ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி ரன் எடுக்க திட்டமிட்டோம். மிட்செல் சான்ட்னரின் ஓவரில் துரதிர்ஷ்டவசமாக நமன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் 18-வது ஓவரிலேயே நாங்கள் போட்டியை முடித்திருப்போம்" என்று தெரிவித்தார்.

IND vs NZ: என்னால் நம்ப முடியல.. நியூசிலாந்திடம் வெற்றியை இந்திய வீரர்கள் பறித்துவிட்டனர்- தினேஷ் கார்த்திக்

Also Read

IND vs NZ: என்னால் நம்ப முடியல.. நியூசிலாந்திடம் வெற்றியை இந்திய வீரர்கள் பறித்துவிட்டனர்- தினேஷ் கார்த்திக்

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் பலமான முன்னிலையைப் பெற்றுள்ளது. தொடரின் 3-வது டி20 போட்டி செவ்வாய்க்கிழமை அக்டோபர் 27 வெலிங்டனில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்கும்.

Story first published: Saturday, October 24, 2026, 18:38 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+