IND vs NZ: இந்திய அணி 15 ஓவரிலேயே வென்று இருக்கலாம்.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த மெகா தவறு
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்ட எளிய கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கேட்ச்சை மட்டும் ஸ்ரேயாஸ் பிடித்திருந்தால் இந்தியாவுக்கு இலக்கு 150 ரன்களாக தான் இருந்திருக்கும். இந்திய அணி 15 ஓவரிலே வென்று இருக்கும்.
மிட்-ஆஃப் திசையில் எளிதாக வந்த கேட்சை அவர் தவறவிட்டதால், நியூசிலாந்து பேட்டர் பெவன் ஜேக்கப்ஸுக்கு ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் நல்வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்து இன்னிங்ஸின் 11-வது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தை பெவன் ஜேக்கப்ஸ் நேராக அடிக்க முயன்றபோது, பந்து பேட்டின் கீழ் பகுதியில் பட்டு மிட்-ஆஃப் திசையில் நின்றுகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி சென்றது. இடுப்பு உயரத்திற்கு வந்த அந்த எளிமையான கேட்சை பிடிக்க ஐயர் முயன்றபோது, பந்து கைகளில் இருந்து நழுவியது. அதை மீண்டுமாக பிடிக்க அவர் எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
கேட்ச் தவறவிடப்பட்டபோது பெவன் ஜேக்கப்ஸ் 20 ரன்களில் இருந்தார். அந்த நேரத்தில் நியூசிலாந்து அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், தமக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஜேக்கப்ஸ், 46 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அரைசதம் அடித்தார்.
அவருடன் இணைந்த கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். தொடக்கத்தில் 6 ஓவர்களில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நியூசிலாந்து அணியை, இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து மீட்டெடுத்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை அப்போதே உடைத்திருடநதால் நியூசிலாந்து அணி 150 முதல் 160 ரன்கள் தான் எடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications

" width="200" height="113">