Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. SENA நாடுகளில் தொடர்ந்து தடுமாறுவது ஏன்?

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி வெறும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தார்.

15 வயது வீரரான வைபவ் சூரியவன்சி நடப்பாண்டில் இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கினார். இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி சோபிக்காத நிலையில், ஜிம்பாப்வே தொடரில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

Vaibhav sooryavanshi

அதன் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வைபவ் சூர்யவன்சி விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்துவிடும் என அவர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் வைபவ் சூரியவன்சி அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறினார்.

IND vs NZ: ஆர்ஸ்தீப் சிங் சாதனை.. 181 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

IND vs NZ: ஆர்ஸ்தீப் சிங் சாதனை.. 181 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

இந்த சூழலில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்திருந்த அவருக்கு முதல் டி20 யிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த தருணத்தில் தான் இரண்டாவது டி20 போட்டிக்கு முன் இசான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டதால் வைபவ் சூரியவன்சிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது.

இஷான் கிசன் இடத்தில் மூன்றாவது வீரராக அவர் விளையாடினார். 181 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணி விளையாடியது. இதில் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். 40 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இந்தியா இழந்த நிலையில், வைபவ் சூரியவன்சி ரசிகர்களின் பலத்த கைத்தட்டலுக்கு நடுவே களத்திற்கு வந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் 8 பந்துகளை எதிர் கொண்டு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி கூட அவர் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 44 ரன்களில் 2வது விக்கெட்டை இழந்தது. சூர்யவன்சி அணியில் இடம்பெறாமல், பெஞ்சில் அமர்ந்து இருந்ததன் மூலம் அவருக்கு பேட்டிங் டச் விட்டு போயிருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

IND vs NZ: அபிஷேக் சர்மா கேட்ச் ஆகி அவுட்.. கடைசியில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்

Also Read

IND vs NZ: அபிஷேக் சர்மா கேட்ச் ஆகி அவுட்.. கடைசியில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்

15 வயது சிறுவனை பெஞ்சில் அமர வைத்து விட்டு திடீரென்று விளையாடு என்று சொன்னால் அவர் எப்படி தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுப்பார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும் SENA நாடுகளில் இதுவரை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மண்ணில் வைபவ் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 24, 2026, 15:20 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+