IND vs NZ: ஆர்ஸ்தீப் சிங் சாதனை.. 181 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து
கிறிஸ்ட்சர்ச்: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், கிளென் பிலிப்ஸ் மற்றும் பிவோன் ஜேக்கப்ஸ் ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்துள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். டிம் செபர்ட் 7 ரன்களிலும், டேரல் மிட்செல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் நடுவரிசையில் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் பிவோன் ஜேக்கப்ஸ் ஜோடி நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை உயர்த்தியது.

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் அபாரமாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இவர் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் நமன் திர்ரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவோன் ஜேக்கப்ஸ் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.
இவர் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர்களின் அதிரடி பாப்ட்னர்ஷிப்பால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது.
இப்போட்டியில் கிளென் பிலிப்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கிய சாதனை ஒன்றை எட்டினார். ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 38வது விக்கெட்டை வீழ்த்திய அவர், ஒரு காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இந்திய பந்துவீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.


Click it and Unblock the Notifications


