Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: என்ன டம்மினு நினைச்சியா? பிரின்ஸ் யாதவால் நியூசிலாந்து வீரருக்கு நிகழ்ந்த கதி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு படுமோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 200 ரன்கள் இந்திய அணி பவுலர்கள் சுலபமாக அடிக்கவிட்டனர். இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் இந்திய வீரர்கள் விட்டுக் கொடுத்தனர்.

Prince Yadav

அது மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி வீரர்கள் முதல் முறை 5 பேரும் 40 ரன்கள் மேல் விட்டுக் கொடுத்து மோசமான ஒரு ரெக்கார்டை படைத்தனர். இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டியில் இந்திய வீரர்கள் தங்களுடைய பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டனர். குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தங்களது முதல் இரண்டு ஓவர்களை துல்லியமாக வீசி நியூசிலாந்து வீரர்களை நிலை தடுமாற செய்தனர்.

IND vs NZ: ஹர்திக், ரிங்கு சிங்கிற்கு பிறகு இந்த வீரர் தான் சிறந்த பினிஷர்.. சுமன் பாராட்டு

IND vs NZ: ஹர்திக், ரிங்கு சிங்கிற்கு பிறகு இந்த வீரர் தான் சிறந்த பினிஷர்.. சுமன் பாராட்டு

குறிப்பாக டிம் செபர்ட் ஏழு ரன்களிலும், டேரல் மிட்செல் 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக மூன்று ஓவர் முடிவில் 18 ரன்களுக்கு நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆர்ஸ்தீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் சுதாரித்து கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 17 ரன்களை அடித்தது. இதனால் நியூசிலாந்து அணியின் பின் ஆலன் தனது பார்மை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிரின்ஸ் யாதவை பந்து வீசு அழைத்தார்.

மயங்க் யாதவ்க்கு பதிலாக பிளேயிங் லெவனுக்குள் வந்த பிரின்ஸ் யாதவ் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பின் ஆலனுக்கு முதல் பந்தை டாட் பாலாக வீசினார். இந்த நிலையில் பிரின்ஸ் யாதவ் அனுபவம் குறைந்த பவுலர், அவருடைய பந்துவீச்சில் எப்படியாவது அடித்து நொறுக்க வேண்டும் என எண்ணத்தில் பின் ஆலன் வித்தியாசமான சாட்டை ஆட முற்பட்டார்.

IND vs NZ: 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்.. புவனேஸ்வர் குமார் அசத்தல்

Also Read

IND vs NZ: 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்.. புவனேஸ்வர் குமார் அசத்தல்

ஸ்டெம்பை விட்டு நகர்ந்து வந்து பந்தை பின்னால் அடித்து விடலாம் என்ற முயற்சியில் பின் அலன் ஈடுபட்டார். ஆனால் பிரின்ஸ் யாதவ் பேட்ஸ்மேனை பாலோ செய்யாமல், அவர் நேராக ஸ்டெம்பை குறி வைத்து ஃபுல் லெங்தில் வீசினார். இந்த மாற்றத்தை பின் ஆலன் கணிக்க தவறியதால், கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Story first published: Saturday, October 24, 2026, 13:28 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+