Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ஹர்திக், ரிங்கு சிங்கிற்கு பிறகு இந்த வீரர் தான் சிறந்த பினிஷர்.. சுமன் பாராட்டு

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் போது, இளம் வீரர் நமன் தீர் காட்டிய அதிரடி ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் திருமலசெட்டி சுமன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து நிர்ணயித்த 226 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் எட்டி சாதனை படைத்தது.

இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 42 ரன்கள் விளாசிய 26 வயதான நமன் தீர், 280 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். நியூசிலாந்து மண்ணில் தனது முதல் போட்டியிலேயே அழுத்தத்தைக் கையாண்டு விளையாடிய விதத்தைப் பாராட்டிய திருமலசெட்டி சுமன், ஹார்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங்கிற்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறந்த 'ஃபினிஷர்' இவர்தான் என்று குறிப்பிட்டார்.

Naman Dhir

நமன் தீர் 3 முதல் 8 வரையிலான அனைத்து வரிசைகளிலும் பேட்டிங் செய்த அனுபவம் கொண்டவர் என்றும், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு மற்றும் சிறந்த ஃபீல்டிங் திறனும் பெற்றிருப்பதாகவும் தனது யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.

IND vs NZ: இவ்வளவு நாள் எங்கிருந்த ராசா? 17 ஆண்டுக்கால சாதனையை பேட்டிங்கில் முறியடித்த நமன் தீர்

IND vs NZ: இவ்வளவு நாள் எங்கிருந்த ராசா? 17 ஆண்டுக்கால சாதனையை பேட்டிங்கில் முறியடித்த நமன் தீர்

முதல் போட்டியில் இஷான் கிஷனுக்கு முன்பாக திலக் வர்மா 3-ஆம் இடத்தில் களமிறக்கப்பட்டது விவாதத்தைக் கிளப்பியது. பின்னரே, இஷான் கிஷனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது தெரியவந்தது. இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சுமன் கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் தொடக்கக் கூட்டணியை மாற்றி வைபவ்வை களமிறக்க அணி நிர்வாகம் முன்வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிகரமாக எட்டிய அதிகபட்ச இலக்கு இதுவாகும். பவர் பிளே ஓவர்களுக்குள் 93 ரன்கள் குவித்து வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்த தொடக்க ஆட்டக்காரர்களை சுமன் வெகுவாகப் பாராட்டினார்.

எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. எதிர்காலம் குறித்து கவலையும் இல்லை.. புவனேஸ்வர் குமார் கருத்து

Also Read

எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. எதிர்காலம் குறித்து கவலையும் இல்லை.. புவனேஸ்வர் குமார் கருத்து

குறிப்பாக, 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தைக் குறிப்பிட்ட அவர், பவர் பிளேவிலேயே அரைசதம் கடந்து சஞ்சு தொடர்ந்து ரன்களைக் குவித்து வருவதாக கூறினார்.மேலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் முக்கியப் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். எட்டாவது வரிசை வரை பேட்டிங் வரிசை நீள்வது வீரர்களுக்குத் துணிச்சலாக விளையாடும் சுதந்திரத்தைத் தருவதாக அவர் கூறினார். தொடரின் இரண்டாவது டி20 போட்டியும் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Story first published: Saturday, October 24, 2026, 11:37 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+