எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. எதிர்காலம் குறித்து கவலையும் இல்லை.. புவனேஸ்வர் குமார் கருத்து
கிறிஸ்ட்சர்ச்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடிய அவர், கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக, புவனேஷ்வர் குமார் பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் பேசிய அவர், நாட்டிற்காக விளையாடுவதை விடப் பெரிய பெருமை எதுவும் இல்லை என்றும், மீண்டும் இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

"எனக்கு என் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த மனநிலையே எனக்குச் சிறப்பாகப் பலன் அளித்துள்ளது. எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் நிகழ் காலத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணிக்காக விளையாடாத இந்தக் காலத்தில், ஒரு மனிதனாக எனக்குள் நல்ல முதிர்ச்சி ஏற்பட்டது" என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் புவ்னேஷ்வர் குமார் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப முக்கியக் காரணமாக அமைந்தது. ஐபிஎல் தொடர்களின் போதும் தன் மீது எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், ஆனால் உடற்தகுதி, பந்துவீச்சுத் திறன் மற்றும் மனரீதியான பயிற்சிகளை முழுமையாகச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படவில்லை என்றும், இந்த இடைவெளியில் ஒரு ஆட்டக்காரராகத் தான் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 89 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள புவ்னேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications


