Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: கால்பந்து ஸ்டைலில் ஆர்ஸ்தீப் சிங் செய்த ரன் அவுட்.. ஆட்டத்தையே மாற்றிய தருணம்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கால்பந்து பாணியில் பெவோன் ஜேக்கப்ஸை ரன் அவுட் செய்த தருணம், சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில், நியூசிலாந்து இன்னிங்ஸின் 18-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தில் அர்ஷ்தீப் சிங் துல்லியமான யார்க்கர் வீச, அதை கிளென் பிலிப்ஸ் எதிர்கொண்டு நேராக பந்துவீச்சாளர் திசையிலேயே தட்டிவிட்டார். அப்போது நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த அதிரடி ஆட்டக்காரர் பெவோன் ஜேக்கப்ஸ், சற்றும் யோசிக்காமல் அபாயகரமான முறையில் ஒரு ரன் எடுக்க முன்னேறி வந்தார்.

Ind vs NZ

பந்தைக் கையால் எடுத்து வீச நேரமில்லை என்பதை சட்டென்று உணர்ந்த அர்ஷ்தீப் சிங், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, ஓடிவந்த வேகத்திலேயே பந்தை தனது காலால் உதைத்து நேரடியாக நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த ஸ்டம்பை தாக்கினார். பெவோன் ஜேக்கப்ஸ் முழுமையாக டைவ் அடித்தபோதிலும், பந்து ஸ்டம்பில் படும்போது அவரது பேட் காற்றில் இருந்தது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்தது.

IND vs NZ: டி20 வரலாற்றில் இந்திய பவுலர்கள் மோசமான சாதனை.. ஃபில்டிங்கில் 20 ரன்கள் விட்டுகொடுத்தது

IND vs NZ: டி20 வரலாற்றில் இந்திய பவுலர்கள் மோசமான சாதனை.. ஃபில்டிங்கில் 20 ரன்கள் விட்டுகொடுத்தது

இதையடுத்து அவர் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டார். ஆட்டமிழப்பதற்கு முன்பாக ஜேக்கப்ஸ் 16 பந்துகளில் 3 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 31 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரைக் குவித்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இந்தியப் பந்துவீச்சு வரிசையை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டனர்.

தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 24 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அணிக்கு அதிரடி தொடக்கம் அமைத்துத் தந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயருவதற்குக் காரணமாக இருந்தார்.

IND vs NZ: மாபெரும் இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்த இந்தியா.. சாம்சன், நமன் தீர் அபாரம்

Also Read

IND vs NZ: மாபெரும் இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்த இந்தியா.. சாம்சன், நமன் தீர் அபாரம்

இது இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து பதிவு செய்த கூட்டான அதிகபட்ச டி20 ஸ்கோராகும். மேலும், சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகவும் இது அமைந்தது.

Story first published: Thursday, October 22, 2026, 17:14 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+