IND vs NZ: டி20 வரலாற்றில் இந்திய பவுலர்கள் மோசமான சாதனை.. ஃபில்டிங்கில் 20 ரன்கள் விட்டுகொடுத்தது
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி களம் கண்ட 19 ஆண்டுகளில், ஒரே போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் தலா 40 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. இது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகும்.

நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் ஃபின் ஆலன் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
டிம் சீஃபர்ட் 24 ரன்களும், டேரில் மிட்செல் 28 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் களமிறங்கிய பெவோன் ஜேக்கப்ஸ் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 67 ரன்களைக் குவித்தது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிக்குத் திரும்பிய புவனேஷ்வர் குமார் உட்பட அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி வழங்கினர். இதில் 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்த அக்ஷர் படேல், மிகவும் விலையுயர்ந்த பந்துவீச்சாளரானார்.
புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் விக்கெட் இன்றி 49 ரன்களையும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 45 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுக்க, நிதிஷ் குமார் தனது 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 40 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் ஃபில்டிங்கிலும் இந்திய வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக டேரல் மிட்செல் 21 ரன்கள் எடுத்திருந்த போது கையில் கொடுத்த கேட்ச்ரச அபிஷேக் சர்மா கோட்டை விட்டார். இதே போன்று சில பவுண்டரிகளை தடுக்க முடிந்தும், இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். இதனால் இந்திய ஃபில்டர்கள் கூடுலாக ஒரு 20 ரன்களை வழங்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications


