Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இவ்வளவு நாள் எங்கிருந்த ராசா? 17 ஆண்டுக்கால சாதனையை பேட்டிங்கில் முறியடித்த நமன் தீர்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான முதல் டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் நமன் திர் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். வெற்றிகரமான டி20 இலக்கு சேஸிங்கில், 7-வது வரிசை அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் 2009-ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கைக்கு எதிராக இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் எடுத்த 33 ரன்களே சாதனையாக இருந்தது. இந்திய அணி 167/5 என நெருக்கடியில் இருந்தபோது நமன் திர் களமிறங்கினார். அப்போது வெற்றிக்கு 33 பந்துகளில் 59 ரன்கள் தேவைப்பட்டன.

Ind vs NZ

நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரின் 17-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய அவர், போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். தொடர்ந்து நாதன் ஸ்மித் வீசிய 18-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி, கடைசி 12 பந்துகளில் தேவைப்படும் ரன்களை 16 ஆகக் குறைத்தார்.

IND vs NZ: அதை பற்றியே பேசி கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது.. ஸ்யேராஸ் ஐயர் கருத்து

IND vs NZ: அதை பற்றியே பேசி கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது.. ஸ்யேராஸ் ஐயர் கருத்து

இறுதி கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த போதிலும், பதற்றமின்றி விளையாடிய நமன் திர், மேட் ஹென்றி வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். நமன் திரின் ஆட்டத்தைப் பாராட்டிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், "அவரது அமைதியான மற்றும் நிதானமான ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. அணிக்கு பந்துவீச்சிலும் அவர் சிறந்த தேர்வுகளை வழங்குகிறார்" என்று தெரிவித்தார்.

IND vs NZ: நாங்க இந்த தவறை செய்துவிட்டோம்..அடுத்த போட்டியில் சரி செய்யனும்..நியூசி கேப்டன் சாண்ட்னர்

Also Read

IND vs NZ: நாங்க இந்த தவறை செய்துவிட்டோம்..அடுத்த போட்டியில் சரி செய்யனும்..நியூசி கேப்டன் சாண்ட்னர்

முன்னதாக, சஞ்சு சாம்சனின் அதிரடி தொடக்கத்தால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 94/1 என வலுவான நிலையில் இருந்தது. இருப்பினும், நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சில் 7 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இறுதியில் ஸ்ரேயஸ் ஐயர், நமன் திர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Thursday, October 22, 2026, 18:23 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+