Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: அதை பற்றியே பேசி கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது.. ஸ்யேராஸ் ஐயர் கருத்து

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்ரக எட்டியது.

இந்திய அணியின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், "இந்த வெற்றி மிகவும் அற்புதமானது. இனி நாங்கள் பயணக் களைப்பு குறித்து யோசிப்பதை நிறுத்திவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளத்தின் தன்மை குறித்துப் பேசிய அவர், "நாங்கள் பந்துவீச்சைத் தொடங்கியபோது விக்கெட் சற்றே மெதுவாகச் செயல்பட்டது."

Shreyas Iyer

"பந்து ஆடுகளத்தில் சற்று நின்று வந்தது. நாங்கள் வீச வேண்டிய லென்த்தை விட சற்று முன்னதாகப் பந்துகளை வீசினோம். ஆனால் ஆட்டம் செல்லச் செல்ல பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் விக்கெட் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறியதுடன், பந்து பேட்டிற்கு எளிதாக வரத் தொடங்கியது. இதைப் பயன்படுத்தி எதிரணி அதிரடியாக விளையாடி 220 ரன்களை எட்டியது. அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது" எனக் கூறினார்.

IND vs NZ: மாபெரும் இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்த இந்தியா.. சாம்சன், நமன் தீர் அபாரம்

IND vs NZ: மாபெரும் இலக்கை வெற்றிக்கரமாக சேஸ் செய்த இந்தியா.. சாம்சன், நமன் தீர் அபாரம்

220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது குறித்துப் பேசிய ஐயர், "220 ரன்களை துரத்தும்போது, முதல் ஆறு ஓவர்களில் 80 முதல் 85 ரன்கள் எடுப்பது ஒரு மகத்தான தொடக்கமாகும். அபிஷேக் மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை."

"தங்களின் பொறுப்பை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் சிறப்பான தொடக்கம் தரும்போது போட்டி நமக்குச் சாதகமாக மாறுகிறது. அதன்பின் வரும் வீரர்கள் ஆட்டத்தை நிதானப்படுத்தி வெற்றிகரமாக முடிப்பதே எங்களின் வேலையாக இருக்கிறது" என்று விளக்கினார்.

IND vs NZ: கால்பந்து ஸ்டைலில் ஆர்ஸ்தீப் சிங் செய்த ரன் அவுட்.. ஆட்டத்தையே மாற்றிய தருணம்

Also Read

IND vs NZ: கால்பந்து ஸ்டைலில் ஆர்ஸ்தீப் சிங் செய்த ரன் அவுட்.. ஆட்டத்தையே மாற்றிய தருணம்

ஏழாவது வரிசையில் களமிறங்கிய நமன் தீரின் பங்களிப்பு குறித்துப் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், "அவர் அணிக்கு பல கூடுதல் ஆப்சன்களை வழங்குகிறார். குறிப்பாக இடதுகை மற்றும் வலதுகை பேட்டர்களுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று முக்கிய ஓவர்களை வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும். பந்துவீச்சில் மட்டுமன்றி, பேட்டிங்கிலும் அவர் காட்டிய அமைதியும் நிதானமும் காண்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது" என்று பாராட்டினார்.

Story first published: Thursday, October 22, 2026, 17:55 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+