IND vs NZ: 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்.. புவனேஸ்வர் குமார் அசத்தல்
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டேரல் மிட்செலை வீழ்த்தியதன் மூலம் புவனேஸ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு 2வது போட்டியிலும் இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்யக் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் டிம் சீஃபெர்ட் 7 ரன்கள் ரன்கள் எடுத்த நிலையில், திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து, மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் வீச்சில் டேரில் மிட்செல் 6 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புவேனேஸ்வர் குமார் முதல் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.
முதல் 3 ஓவர்களிலும், நியூசிலாந்து வீரர்கள் அதிரடியை காட்ட முயன்ற போதும், தங்களுடைய துல்லியமான பந்துவீச்சால், அவர்களது ரன்கள் வேகத்தை புவனேஸ்வர் குமார் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் கட்டுப்படுத்தினர். இப்போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடைப் பகுதி காயம் காரணமாக விலகிய இஷான் கிஷனுக்குப் பதிலாக வைபவ் சூரியவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய உள்ளார். மேலும் மயங்க் யாதவுக்குப் பதிலாக பிரின்ஸ் யாதவ் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தப் போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் 300-வது போட்டி இதுவாகும். பாகிஸ்தானுக்குப் பிறகு 300 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications


