Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: "ஒட்டுமொத்த இந்தியாவும்.. கம்பீர் சொன்ன ஒரு வார்த்தை.." அதுக்காக கடைசி வரை நின்றேன்-திலக் வர்மா

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. 181 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்தும் போது 69 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

அப்போது களத்திற்கு வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஆறு பவுண்டரிகளும்,ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் திலக் வர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இது குறித்து பேசிய அவர் ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு, போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Ind vs NZ

போட்டிக்கு முன்பாகப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் சிதான்ஷு கோடாக் ஆகியோரிடம் பேசியதை நினைவு கூர்ந்த அவர், "முழு இந்தியாவும் உன்னை நம்புகிறது. நீ கடைசி வரை களத்தில் இருந்தால் போட்டியை வெற்றி பெறச் செய்யலாம் என்று இருவரும் கூறினர். அதை மட்டுமே மனதில் கொண்டு போட்டியை முடிந்தவரை ஆழமாகக் கொண்டு செல்ல திட்டமிட்டேன். அனைவரின் நம்பிக்கையையும் பூர்த்தி செய்து போட்டியை முடித்துக் கொடுத்ததில் பெருமையடைகிறேன்," என்று கூறினார்.

IND vs NZ: அபிஷேக் சர்மா கேட்ச் ஆகி அவுட்.. கடைசியில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்

IND vs NZ: அபிஷேக் சர்மா கேட்ச் ஆகி அவுட்.. கடைசியில் நடுவர் கொடுத்த டிவிஸ்ட்

நமன் தீருடனான பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய அவர், முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆடுகளம் சற்று மெதுவாக இருந்ததாகக் குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி ரன் சேர்ப்பதே தங்களது பிரதான திட்டமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மிட்செல் சான்ட்னரின் கடைசி ஓவரில் நமன் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் 18-வது ஓவரிலேயே போட்டியை முடித்திருக்க முடியும் என்றும், நமன் பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது என்றும் கூறினார். இறுதியில் ஐதராபாத்தைச் சேர்ந்த நிதிஷ் ரெட்டியும் தானும் இணைந்து போட்டியை வெற்றி கரமாக முடித்து வைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

IND vs NZ: நாங்கள் பல தவறுகளை செய்துவிட்டோம்.. இந்த 3 வீரர்களும் பிராமாதமாக ஆடினார்கள்-சாண்ட்னர்

Also Read

IND vs NZ: நாங்கள் பல தவறுகளை செய்துவிட்டோம்.. இந்த 3 வீரர்களும் பிராமாதமாக ஆடினார்கள்-சாண்ட்னர்

சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டது குறித்து பேசிய அவர், பந்துகள் தங்களுக்குச் சாதகமான இடத்தில் வரும்போது மட்டுமே அடித்து ஆட முடிவு எடுத்ததாகவும், மற்ற நேத்தில், பந்தை தட்டிவிட்டு வேகமாக ஓடி ரன் சேர்த்ததாகவும் கூறினார். சுழற்பந்து வீச்சில் 4 முதல் 5 முறை இரண்டு ரன்கள் எடுத்ததன் மூலம் கிடைத்த 8 முதல் 10 ரன்கள் மிகவும் முக்கியமானவை என்று சுட்டிக்காட்டினார். மேலும், இந்த பெரிய மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி சிக்ஸர்களை அடிக்க முடியும் என்பதால், அதற்காகக் காத்திருந்து போட்டியைச் சிறப்பாக முடித்ததாகத் தெரிவித்தார்.

Story first published: Saturday, October 24, 2026, 17:16 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+