IND vs NZ: நாங்கள் பல தவறுகளை செய்துவிட்டோம்.. இந்த 3 வீரர்களும் பிராமாதமாக ஆடினார்கள்-சாண்ட்னர்
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ஒரு பந்து எஞ்சிய நிலையில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா 26 பந்துகளில் அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணி கேப்டன் ஷாண்ட்னர் இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக விளையாடும் போது இது போன்ற போட்டி முடிவுகள் அமைய தான் செய்யும்.

குறிப்பாக திலக் வர்மா மற்றும் நமன் திர் இறுதியில் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். அந்த இடத்தில் நாங்கள் இன்னொரு ஒரு விக்கெட்டை எடுத்திருக்க வேண்டும். இப்படித்தான் இந்த தொடரில் போட்டிகள் அமைகிறது. இலக்கை இந்திய அணி கட்டுப்பாட்டுடன் துரத்தினார்கள் என்று எண்ணுகிறேன்.
இதன் மூலம் நாங்கள் இறுதியில் சில தவறுகளை செய்து விட்டோம். எங்கள் மனதில் தற்போது நிறைய விஷயங்கள் ஓடுகிறது. ஆனால் எங்கள் அணி வீரர்கள் பந்துவீச்சு சிறப்பான ஒரு தொடக்கத்தை அளித்தார்கள். 180 என்ற இலக்கை துரத்தும் போது பவர்பிளேவில் அதிரடி தொடக்கத்தை இந்திய அணி பெற்ற பிறகு ஆட்டத்தை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமில்லை.
இருந்தும், நாங்கள் அதை செய்தோம். நடு ஓவர்களில் எங்கள் அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு சில விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எனினும் சில நோ பால்கள் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது என்று நினைக்கின்றேன். அதுதான் எங்களை காயப்படுத்தி விட்டது. கடைசி இரண்டு போட்டிகளுமே நன்றாக இருந்தது.
சில, சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி தவறு செய்யாமல் இருக்க வேண்டும்.பில்டிங்கிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் அது போக போக எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். இரண்டாவது t20 போட்டியில் ஷார்ட்நர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


