Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வைபவ் சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் இடமில்லை.. கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடி

ஆக்லாந்து: ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட இந்திய அணியில் அதிரடியாக 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மோசமான ஃபார்மில் ரன்களை வாரி வழங்கிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, மயங்க் யாதவ் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதன் காரணமாக கடந்த போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி மிரட்டிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

IND vs NZ Bhuvneshwar Kumar Vaibhav Suryavanshi dropped from India Playing XI

டாஸ் வென்ற பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். கடந்த போட்டிகளில் செய்த அதே பாணியை பின்பற்ற உள்ளோம். முதல் பந்திலிருந்தே வீரர்கள் காட்டிய அதிரடியும் திட்டங்களைச் செயல்படுத்திய விதமும் அற்புதம். மைதானத்தில் பலத்த குளிர் காற்று வீசுகிறது. வெற்றி வேட்கையுடன் இரக்கமின்றி ஆட வேண்டும் என்ற செய்தி வீரர்களுக்குத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் சீம் மூவ்மென்ட் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புவனேஷ்வருக்குப் பதிலாக மயங்க் யாதவும், வைபவுக்குப் பதிலாக இஷான் கிஷனும் அணிக்குள் வந்துள்ளனர்" என்றார்.

நியூசிலாந்து அணியில் பணிச்சுமை காரணமாக விடுவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக நேதன் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 புதிய பயிற்சியாளர்கள் சேர்ப்பு.. ராபின் உத்தப்பா, மெக்லெனகன், திலிப்

மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 புதிய பயிற்சியாளர்கள் சேர்ப்பு.. ராபின் உத்தப்பா, மெக்லெனகன், திலிப்

இந்தியா பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ்.

நியூசிலாந்து பிளேயிங் 11: ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நேதன் ஸ்மித், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்.

Story first published: Friday, October 30, 2026, 12:10 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+