Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 புதிய பயிற்சியாளர்கள் சேர்ப்பு.. ராபின் உத்தப்பா, மெக்லெனகன், திலிப்

மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னாள் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோரை முக்கிய பயிற்சியாளர்களாக மும்பை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

அண்மையில் லசித் மலிங்கா உள்ளிட்ட உதவி பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட் தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழுவை மும்பை இந்தியன்ஸ் களமிறக்கியுள்ளது. பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பாவும், முதன்மை பந்துவீச்சு பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகனும், பீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப்பும் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களுடன் மும்பை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி பந்துவீச்சு வளர்ச்சிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Mumbai Indians Coaching Staff for IPL 2027 - Robin Uthappa Mitchell McClenaghan T Dilip Joined

ராபின் உத்தப்பா கடந்த 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டிங் பயிற்சியாளராக மீண்டும் அதே அணிக்குள் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் மெக்லெனகன், மும்பை அணி 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய 4 சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்றபோது அணியின் முக்கிய பந்துவீச்சாளராகத் திகழ்ந்தவர். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை மும்பை அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளை வென்றபோதும், 2025 சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியபோதும் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து புகழ்பெற்ற டி.திலீப்பின் வருகை மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் மும்பை அணியுடன் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் கொண்ட தவால் குல்கர்னி, இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்து பட்டை தீட்டும் பணியில் ஆண்டு முழுவதும் ஈடுபடுவார்.

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் இருந்து முக்கிய பவுலர் நீக்கம்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் இருந்து முக்கிய பவுலர் நீக்கம்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், அதை மாற்றி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்த மெகா வியூகத்தை அமைத்துள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 11:32 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+