துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக அனைத்து வீரர்களும் தீவிர வலைப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டும் வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ரோகித் சர்மா பயிற்சி முடித்து வந்த போது மீண்டும் ஒரு தவறை செய்தது ஒட்டுமொத்த இந்திய வீரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

அதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் மற்ற துறைகளில் சரியாக சோபிக்க மாட்டார்கள். இல்லையென்றால் ஒருவர் ஜீனியஸ் ஆக இருந்தால், அவர்களிடம் சாதாரண விஷயங்களில் பல குறைகள் இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவது, அழுத்தத்தை கையாள்வது என கிரிக்கெட்டில் சிறந்த விளங்கும் வீரர் மற்றும் கேப்டனாக இருக்கின்றார்.
ஆனால் ரோகித் சர்மாவுக்கு சிறுவயதில் இருந்து ஒரு குறைபாடு இருக்கிறது. அதுதான் ஞாபக மறதி. ரோகித் சர்மாவு எந்த பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என மறந்துவிடுவார். குறிப்பாக ஹோட்டல் அறைக்கு செல்லும்போதும், இல்லை பயிற்சி முடித்துவிட்டு ஹோட்டலுக்கு செல்லும்போதும் எடுத்து வந்த பொருட்களை அப்படியே மறந்துவிட்டு வந்து விடுவாராம்.
அதன் பிறகு தான் மீண்டும் தேடி என்னுடைய பொருளை மறந்து விட்டேன் என தேடுவாராம். இதனால் பலமுறை இந்திய அணி பேருந்து தாமதமாக புறப்பட்டு இருப்பதாக விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே பேட்டி ஒன்றில் கிண்டலாக தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு ஹோட்டலுக்கு திரும்ப இருந்தார்.
அப்போது திடீரென ரோகித் சர்மா தன்னுடைய மொபைல் போனை நான் மறந்துவிட்டு வந்து விட்டேன் எனக்கூறி அணி நிர்வாகிகளை உடனே எடுத்து வாருங்கள் என்று கூறினார். ரோகித் சர்மாவின் இந்த மறதியை பார்த்து மற்ற இந்திய வீரர்கள் சிரித்தனர். ரோகித் சர்மா மொபைல் மீண்டும் அவர் கைக்கு வந்தவுடன் தான் வீரர்கள் பேருந்தில் கிளம்பினர். இதனால் 10 நிமிடம் வரை பேருந்து தாமதமாக புறப்பட்டது.