Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- என்னங்க..? முக்கிய கட்டத்தில் காலை வாரிய கில்.. DRS கூட போச்சு.. கவாஸ்கர் அறிவுரை

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது. நியூசிலாந்தை எதிர்கொண்டு துபாயில் விளையாடும் இந்திய அணி நடப்பு தொடரில் முதல்முறையாக பேட்டிங்கை முதலில் விளையாடுகிறது.

அரையிறுதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், அந்தப் போட்டிக்கு முன்பு அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Champions Trophy 2025 Ind vs NZ virat kohli Rohit sharma

அதுமட்டுமில்லாமல் துபாயில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய அனுபவமும் வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மன்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.
இந்த சூழலில் இந்திய அணியின் துணை கேப்டன் நல்ல பார்மில் இருந்து வருகிறார். தொடர்ந்து சதம், சதமாக அடித்ததன் மூலம் தற்போது அவர் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.

பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் நல்ல பார்மில் இருக்கும் போது அதனை பயன்படுத்திக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் சேர்க்க வேண்டும்.
அப்படி நடந்தால் மட்டுமே விராட் கோலி, சச்சின் போன்ற நிலையை அடைய முடியும். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகளை எதிர் கொண்டு வெறும் இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்தார்.

ஹென்றி பந்தில் lBW ஆனார். எனினும் டிஆர்எஸ்ஐ அவர் பயன்படுத்த நடுவரின் முடிவிலும் அது அவுட் என தெரியவந்தது. இதனால் இந்தியாவுக்கு ஒரு டிஆர்எஸ் வீணாகப் போனது. அரையிறுதி செவ்வாய் அன்று தொடங்க உள்ள நிலையில், இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், "அணியில் இருக்கும் கில் போன்ற இளம் வீரர்கள் விராட் கோலி போன்ற வீரர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் முன்பு விராட் கோலி எப்படி தயாராகிறார்? இன்னிங்ஸை எப்படி கட்டமைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்? என்பதை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்."

Story first published: Sunday, March 2, 2025, 15:22 [IST]
Other articles published on Mar 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+