Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- "அரையிறுதிக்கு முன்பு இந்திய அணிக்கு நல்ல விஷயம் நடந்து இருக்கிறது".. கவாஸ்கர் கணிப்பு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குரூப் ஏவில் முதல் இடத்தை பிடிக்கும். இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி பெறும் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Champions Trophy 2025 Ind vs NZ virat kohli Rohit sharma

இந்த நிலையில் பேட்டிங்கிற்கு கடினமாக இருக்கும். ஆடுகளத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த ஆடுகளம் இரவு நேரங்களில் தான் பேட்டிங்கிற்கும் கொஞ்சம் சாதகமாக மாறும். இந்த நிலையில் டாசை இழந்த கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்,அரை இறுதிக்கு முன் நல்ல விஷயம் இந்தியாவுக்கு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய் அவர் சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் துபாய் ஆடுகளத்தில் நாம் தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் சேசிங் தான் செய்திருக்கிறோம்.

இதனால் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்ய நமது வீரர்கள் பழகவில்லை. இதேபோன்று பவுலர்கள் இரண்டாவதாக பந்து வீசி ரன்களை தற்காத்துக் கொள்ளவும் பழகவில்லை. இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வது எப்படி என்ற அனுபவம் நமது வீரர்களுக்கு கிடைக்கும். நமது வீரர்கள் சேஸிங் செய்து பழகிவிட்டார்கள்.

இதனால் அரை இறுதிக்கு முன்பு முதலில் பேட்டிங் செய்வது நல்ல விஷயம். ஏனென்றால் அரையிறுதியில் நாம் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். இதனால் தான் டாசை வென்றிருந்தாலும், நான் முதலில் பேட்டிங் தான் செய்திருப்பேன் என கேப்டன் ரோகித் சர்மா கூறினார். முதல் 10 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 55 -65 ரன்கள் அடித்தால் கூட போதும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, March 2, 2025, 14:36 [IST]
Other articles published on Mar 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+