Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 5 விக்கெட் வீழ்த்திய வருண்.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா டபுள் ஹாட்ரிக் வெற்றி

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி டபுள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகள் பெற்று தற்போது முதல் இடத்தில் பிடித்திருக்கிறது.

துபாயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், துணை கேப்டன் கில் இரண்டு ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணி 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Champions Trophy 2025 Ind vs NZ Varun chakravarthy Rohit sharma

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல் அணியை சரிவிலிருந்து மீட்டனர். அக்சர் பட்டேல் 42 ரன்களில் ஆட்டமிழக்க அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். இறுதியில் கே எல் ராகுல் 23 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசித்தனர். இதனை அடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா ஆறு ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். வில் யங் 22 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழக்க ,டேரல் மிட்செல் 17 ரன்களிலும் டாம் லாத்தம் 14 ரன்களிலும் வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளன் பிலிப்ஸ் 12 ரன்களிலும், பிரேஸ்வெல் இரண்டு ரன்களிலும் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். எனினும் கடைசிவரை நின்று இந்திய அணிக்கு பயம் காட்டிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாட்னர் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட அவரையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். இதன் மூலம் 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 205 ரன்களில் ஆட்டம் இழந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி தொடரில் தாம் விளையாடிய முதல் போட்டியிலே 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, March 2, 2025, 22:06 [IST]
Other articles published on Mar 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+