Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை இப்படி தான் வீழ்த்தப் போறோம்.. திட்டத்தை கசிய விட்ட நியூசி. “பர்த்டே பாய்”!

Recommended Video

WORLD CUP 2019: AUS VS PAK | நியூசிலாந்து திட்டத்தை கசிய விட்ட லாக்கி பெர்குசன்- வீடியோ

நாட்டிங்ஹாம் : இந்திய அணியை தங்கள் பந்துவீச்சால் எப்படி வீழ்த்துவோம் என நியூசிலாந்து அணியின் திட்டங்களை அப்பட்டமாக கூறி இருக்கிறார் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன்.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இரண்டு சவாலான அணிகளை வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்து நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

சவாலான போட்டி

சவாலான போட்டி

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளை விட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும். இந்த நிலையில், அந்தப் போட்டி அன்று தன் 28வது பிறந்த நாளை கொண்டாட உள்ள லாக்கி பெர்குசன், தங்கள் அணியின் திட்டம் என்ன என்பதை ஒரு வரி விடாமல் கூறி இருக்கிறார்.

இந்தியா நிதானம்

இந்தியா நிதானம்

இந்திய அணியின் பலம் வலுவான துவக்கம் தான். உலகக்கோப்பை போட்டியிலும், அதற்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியா பவர்பிளே ஓவர்களில் மிகவும் நிதானமாக ரன் சேர்த்தது.

கடினம்

கடினம்

அவர்கள் பொறுமையாக ஆடும் நிலையில், அவர்கள் விக்கெட் எடுப்பது கடினம், அப்படி நியூசிலாந்து விக்கெட் எடுக்க முயற்சி செய்தால், அதிக ரன்களை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார் பெர்குசன்.

அழுத்தம்

அழுத்தம்

அவர்கள் விக்கெட்டை எடுக்க ஒரே வழி ரன் கொடுக்காமல் அழுத்தம் கொடுத்து விட்டு, அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக காத்திருப்பது தான். அங்கே இருந்து அப்படியே போட்டியை நம் பக்கம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தவான் இல்லை

தவான் இல்லை

அதே சமயம், இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளிலும் துவக்க வீரர்கள் மாற்றி, மாற்றி சதம் அடித்து இருக்கும் நிலையில், அவர்களில் ஒருவரான தவானுக்கு காயம் ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டம் என்றாலும், நியூசிலாந்து அணிக்கு அது சாதகம். அதை பயன்படுத்திக் கொள்வோம் என்றார் பெர்குசன்.

ட்ரென்ட் பிரிட்ஜ் பவுன்சர்

ட்ரென்ட் பிரிட்ஜ் பவுன்சர்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுன்சர் தாக்குதல் மூலம், பாகிஸ்தான் அணியை 105 ரன்களுக்கு சுருட்டி அனுப்பியது. அதே போல, நியூசிலாந்து அணியும் பவுன்சர் வீச முடிவு செய்திருக்கும் திட்டத்தையும் கூறினார்.

பயிற்சிப் போட்டி தோல்வி

பயிற்சிப் போட்டி தோல்வி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுக்கு முன் பயிற்சிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. ட்ரென்ட் பவுல்ட் வீசிய ஸ்விங் பந்துகளில் இந்திய டாப் ஆர்டர் சரிந்தது. இந்தியா அந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.

ட்ரென்ட் பவுல்ட்

ட்ரென்ட் பவுல்ட்

ஆனால், அந்தப் போட்டி நடைபெற்றது வேறு மைதானம். எனினும், ட்ரென்ட் பவுல்ட் அன்று இந்திய அணியின் விக்கெட்களை சரித்தது, இந்தப் போட்டிக்கு முன் நம்பிக்கை அளிக்கும் ஒன்று என குறிப்பிட்டார் பெர்குசன்.

நியூசிலாந்து அணி என்ன திட்டம் போட்டாலும், போட்டி அன்று என்ன செய்கிறது என பார்க்கலாம்!!

Story first published: Wednesday, June 12, 2019, 13:51 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+