Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: மேலும் ஒரு நியூசிலாந்து வீரர் காயம்.. 3 பேர் பங்கேற்பது சந்தேகம்.. கடுப்பான சாண்ட்னர்

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயமடைந்துள்ளார். ஃபீல்டிங் பயிற்சியின் போது சக வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடன் ஏற்பட்ட மோதலில் கான்வே காயமடைந்ததால், இந்தத் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், பயிற்சியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர். மேட் ஹென்றிக்கு Concussion test செய்யப்பட்டு அவர் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கான்வே தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Mitchell santner

தலைப்பகுதியில் ஏற்படும் காயங்களை மிகவும் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சான்ட்னர், ஒருவேளை கான்வே விளையாட முடியாமல் போனால் அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பர்-பேட்டர் டிம் செய்ஃபெர்ட் களமிறக்கப்படுவார் என்றும் உறுதிப்படுத்தினார்.

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் Floating approach முறை.. கேப்டன் சுப்மன் கில் கருத்து

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் Floating approach முறை.. கேப்டன் சுப்மன் கில் கருத்து

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே நியூசிலாந்து அணி காயம் காரணமாக முக்கிய வீரர்களை இழந்துள்ளது. முன்னணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோர் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரிலிருந்து ஏற்கனவே விலகியுள்ளனர். வரவிருக்கும் டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டும், தோள்பட்டை காயம் முழுமையாகக் குணமடையாததாலும் ரச்சின் ரவீந்திராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்.. முக்கிய அப்டேட் தந்த கேப்டன் சுப்மன் கில்

Also Read

ஹர்திக் பாண்டியா எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்.. முக்கிய அப்டேட் தந்த கேப்டன் சுப்மன் கில்

இந்தியா போன்ற அணியை எதிர்கொள்ளும் போது ரச்சின், மார்க் சாப்மேன் இல்லாதது உண்மையிலே அவமானம் தான் என்றும் கேப்டன் சாண்ட்னர் கூறினார். இதனையடுத்து, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் டீன் ஃபாக்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 3, 2026, 9:03 [IST]
Other articles published on Nov 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+