IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் Floating approach முறை.. கேப்டன் சுப்மன் கில் கருத்து
ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் திட்டம் குறித்து கேப்டன் சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப 5 மற்றும் 6 ஆகிய இடங்களுக்கு அக்சர் படேல் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறக்கப்படும் floating approach முறையை இந்தியா பின்பற்றும் என்று அவர் கூறினார்.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் புதன்கிழமை தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியுடன் இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்திய அணியின் டாப் 4 பேட்டிங் வரிசை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும், நடுவரிசையில் மட்டுமே தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கில் தெரிவித்தார்.

"5 மற்றும் 6 ஆகிய இடங்களுக்கு நாங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றி கொள்வோம். எங்கள் டாப் 4 பேட்டர்கள் உறுதியாக உள்ளனர், அவர்கள் அனைவரும் வலது கை பேட்டர்கள். எனவே, இடது கை பேட்டர் தேவைப்பட்டால் அக்சர் பாய் களமிறங்குவார். போட்டியின் சூழலை பொறுத்து கேஎல் ராகுலும் களமிறங்கலாம்," என்று முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக கில் கூறினார்.
முன்னதாக தமக்கு ஏற்பட்ட கழுத்து காயம் குறித்த அச்சங்களையும் கில் நிராகரித்தார். 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கிட்டத்தட்ட ஒரு மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தார்.
நவம்பர் 19, 2025 அன்று கவுகாத்தியில் பயணிப்பதற்கு முன் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். எனினும், தற்போது தமக்கு எந்தவித அசௌகரியமும் இல்லை என்றும், பயிற்சி போட்டிகளில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பணிகளை எந்தச் சிக்கலும் இன்றி நிறைவு செய்துள்ளதாகவும் கில் கூறினார்.
"எந்தப் பிரச்சினையும் இல்லை... நான் ஒன்றரை மணி நேரம் பேட்டிங் செய்தேன், ஃபீல்டிங்கும் எந்தச் சிரமமும் இன்றி செய்தேன். தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நவம்பர் 4 புதன்கிழமை அன்று ஆக்லாந்தில் தொடங்குகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 7 சனிக்கிழமையன்று வெலிங்டனிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 10 செவ்வாய்க்கிழமையன்று ஹேமில்டனிலும் நடைபெறவுள்ளன. தொடரின் 4-வது போட்டி நவம்பர் 13 வெள்ளிக்கிழமையன்றும், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமையன்றும் மவுண்ட் மாவுங்கனுய் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்குகின்றன.


Click it and Unblock the Notifications


