பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் கிண்டல் செய்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
சூது கவ்வும் படத்தில் வழக்கில் இருந்து தப்பிக்க முக்கிய ஆதாரமாக இருந்த வீடியோ கேசட் ஆட்டோவில் ஏற்றப்பட்டு உடைந்துவிடும். இதனால் மனமுடையும் பாபி சிம்ஹா, குழந்தையை போல் கதறி அழுவார். அதுபோல் இந்திய அணியும், அதன் ரசிகர்களும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின் கதறி அழுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. அந்தப் போட்டிக்கு பின் ரோஹித் சர்மா, இந்திய வீரர்கள் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து பெருமிதம் தெரிவித்திருந்தார். தற்போது அதே புகைப்படத்தை எடுத்து ரோஹித் சர்மா, "அவ்வளவு தான்.. நம்மளை முடிச்சு விட்டீங்க போங்க" என்று இந்திய 2 படத்தில் சித்தார்த் கதறி அழுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் தாறுமாறு தக்காளி சோறு ரகம்.

வடசென்னை படத்தில் கிஷோர், "அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்டா" என்று வசனம் செல்வார். அதேபோல் கேகேஆர் அணியின் கேப்டனாக கம்பீர், ஆர்சிபி அணியை 49 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார். இன்று வரை இது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதில் கிஷோரை நியூசிலாந்து அணி வீரராக மாற்றி, அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்டா என்று கம்பீரை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நாங்க வேற மாதிரி ரகம்.

பெங்களூர் மைதானத்தில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளது. நீண்ட நாட்களாக இந்திய மண்ணில் எந்த அணியும் 49 ரன்களுக்கு குறைவாக ரன்களை சேர்க்கவில்லை. தற்போது இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டதால், ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆர்சிபி ரசிகர்கள் தரப்பில், "ஆர்சிபி 49 ரன்கள்.. இந்திய அணி 46 ரன்கள் தான்.. ஆர்சிபி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நானும் ரவுடி தான் ரகம்.

கலகலப்பு படத்தில், உலகத்திலேயே ரொம்ப நல்லவங்க, சாந்தமானவங்க, திருப்பி அடிக்காதவங்க 3 பேரு தான்.. பழைய துணிக் கடைக்காரன், கோயில் பூசாரி, கணக்கு வாத்தியார் என்று வசனம் சொல்வார்கள். அதனை மாற்றி, "உலகத்திலேயே ரொம்ப நல்லவங்க.. சாந்தமானவங்க.. நம்ம ஸ்லெட்ஜ் பண்ணா திரும்ப பார்த்து சிரிக்கிறவங்க மூனே பேரு தான்.. அதுல ஒருத்தன் தான் கிவி பாய்ஸ்.. அவங்க கிட்ட போய் ஸ்லெட்ஜ் செய்துட்டு இருக்கான் இந்த சிராஜ்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல்யா உனக்கு ரகம்.

