For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ Final : எந்த சேனல், ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம்.. தொடங்கும் நேரம்? மழை பெய்யுமா?

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த இரண்டு அணிகளும் தான் தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இந்திய அணி, வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை அரையிறுதி சுற்றில் வீழ்த்தி இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி லீக் சுற்று இந்தியாவுடன் தோற்றது.

Champions Trophy 2025 IND vs NZ Final Virat kohli Rohit sharma

மேலும் அரையிறுதி இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து தற்போது இறுதி போட்டியில் மீண்டும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் கடைசியாக துபாயில் மோதின. அதில் இந்தியா தான் வெற்றி பெற்றது. எனினும், நியூசிலாந்து அணி தற்போது துபாயில் விளையாடிய அனுபவத்தை பெற்று இருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியதில் இந்தியா தான் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. எனினும் நியூசிலாந்து அணியை ஐசிசி தொடரில் சர்வ சாதாரணமாக எண்ணி விட முடியாது. இந்தியாவை தோற்கடிக்க வல்லமை கொண்ட ஒரே அணியாக நியூசிலாந்து தான் விளங்குகிறது என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்திய அணியை இருப்பது போல் நியூசிலாந்து அணியிலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பைனலில் எந்த அணி சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு விளையாடுகிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும்.

இரண்டு மணிக்கு டாஸ் வீசப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டியை பார்க்கலாம். டிடி டிஷ் இருந்தால் டிடி தொலைக்காட்சிகளில் இந்த போட்டியை இலவசமாக நேரலையில் பார்க்கலாம். இல்லையென்றால் ஓடிடியில் இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பில் பார்க்கலாம். இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.அதே வேளையில் துபாயில் தற்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி பெய்தால் கூட போட்டி திங்கட்கிழமை ரிசர்வ் டேவாக நடைபெறும். அதிலும் மழை பெய்தால் இது அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்படும்.

Story first published: Sunday, March 9, 2025, 6:30 [IST]
Other articles published on Mar 9, 2025
English summary
IND vs NZ Final Champions Trophy 2025- When and Where to Watch- Live streaming details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+