For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: உங்களை எல்லாம் பார்த்தா சிரிப்பு தான் வருது.. இந்தியா மீது புகாருக்கு அஸ்வின் தந்த பதிலடி

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் தான் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த சூழலில் மற்ற அணிகள் எல்லாம் அதிக தூரம் பயணம் செய்யும் நிலையில் இந்தியா மட்டும் ஒரே இடத்தில் விளையாடலாமா என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Champions Trophy 2025 IND vs NZ Final Rohit sharma

இது குறித்து பேசிய அவர், "ஒரு தொடரில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து சாம்பியன் பட்டம் கிடைக்குமே தவிர, காரணம் சொல்வதால் கிடையாது. இந்திய அணி பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் துபாயில் தொடர்ந்து விளையாடுவது குறித்து கேட்கப்படும் கேள்வியை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது."

"2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் தான் விளையாடியது. ஆனால் அந்த அணி முதல் சுற்றிலே வெளியேறியது. தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லாதது அந்த அணியின் குற்றமா, எந்த அணியாக இருந்தாலும் சரி நல்ல கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்."

"இந்தியா தற்போது இறுதிப் போட்டியில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். இறுதிப் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இறுதிப் போட்டிக்கு வர தகுதியுடைய அணியாக இந்தியா இருந்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் அந்த மாதிரி செயல் திறனை தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்."

"நமது நாட்டு வீரர்கள் மீது நாமே சேற்றை வாரி வீசக்கூடாது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோற்று விட்டு நமது ஆடுகளத்தை புகார் சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளிநாட்டில் சென்று தோற்றால் இது போல் எந்த ஒரு குறையும் சொன்னது கிடையாது. இந்த கோப்பையை இந்தியா வென்றால் கூட தொடர்ந்து இரண்டு ஐசிசி தொடரை நாம் வென்று இருக்கிறோம் என்று நினைத்து அனைவரும் கொண்டாடுங்கள்."

"அதை விட்டுவிட்டு மற்றவர்கள் நம்மை பார்த்து சொல்லும் குறையை நீங்களும் ஆமோதிக்காதீர்கள். நாம் ஒரே மைதானத்தில் விளையாடுகிறோம் என்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் சில இந்தியர்களும் இப்படி பேசுவது பார்த்து எனக்கு கோபம் வருகிறது" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Saturday, March 8, 2025, 15:09 [IST]
Other articles published on Mar 8, 2025
English summary
IND vs NZ Final champions Trophy- R Ashwin Hit backs at critics about india playing at dubai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+