Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ Final: 6வது ஓவரிலேயே போட்டியை முடித்த இந்தியா.. கட்டம் கட்டி தூக்கிய கம்பீர், சூர்யகுமார்

அகமதாபாத்: டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தி கோப்பையில் ஒரு கையை வைத்து விட்டது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவிக்க இசான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அரைசதம் கடந்தனர். இறுதியில் சிவம் துபே அதிரடி காட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. இப்படிப்பட்ட இலக்கை எதிர்கொள்ளும்போது பவர்பிளே என்பது மிகவும் முக்கியம். இந்திய அணி தங்களுடைய பவர் பிளேவில் விக்கெட்டையே இழக்காமல் 92 ரன்கள் குவித்தனர்.

இதனால் தான் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை எட்ட முடிந்தது. இந்த சூழலில் நியூசிலாந்து அணி இறுதியில் இதேபோல் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணியை பவர் பிளேவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த இந்திய அணி, அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.

குறிப்பாக போட்டி தொடங்குவதற்கு முன்பே அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களும் பின் ஆலன் பேட்டிங் செய்யும்போது அக்சர் பட்டேல் பந்து வீச அழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல் கேப்டன் சூரியகுமார் யாதவும் அக்சர் பட்டேலை பவர்பிளேவில் பயன்படுத்தினார். இதனால் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர்.

கடந்த அரை இறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய பின் ஆலன் இன்றைய ஆட்டத்தில் வெறும் ஏழு பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேலிடம் ஆட்டமிழந்தார்.இதேபோன்று இந்த தொடரில் பட்டையை கிளப்பிய ரச்சின் ரவிந்தரா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் பவர் பிளேவில் களத்திற்கு வந்தார்.

ஆனால் அவர் ஐந்து ரன்கள் எடுத்திருந்தபோது அச்சர் பட்டேல் பந்து வீசி கிளீன் போல்ட் ஆனார். எனினும் மறுமுனையில் டிம் செபர்ட் மட்டும் அதிரடி காட்ட நியூசிலாந்து அணி பவர் பிளேவில் 52 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

Story first published: Sunday, March 8, 2026, 21:55 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+