துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் மட்டும் விளையாடுவதை பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்தியா ஒரே மைதானத்தில் எந்த பயணமும் இன்றி விளையாடுவதால் தான் வெற்றி பெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழலில் இறுதிப் போட்டிக்கு தோல்வியே பெறாமல் இந்திய அணி பைனலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய அணிக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதிரணிகள் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது. எதிரணிகளிடம் பயத்தை இந்தியா விதைத்து விட்டது. தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி நியூசிலாந்தாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் தற்போது இந்தியாவை பார்த்து பயப்பட செய்கிறார்கள்.
லீக் சுற்றில் கூட நியூசிலாந்து அணி தொடர்ந்து பந்து வீச்சை மாற்றிக் கொண்டே வந்தது. பெரும்பாலான வீரர்களை பந்து வீச வைத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் தயாராகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூசிலாந்துக்கு சாதகமாக டாஸ் அமைந்தது.
மேலும் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் தற்போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவர்கள் இதே போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அக்சர் பட்டேல், ஜடேஜா போன்ற வீரர்கள் அபாயகரமாக விளங்குவார்கள். ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
அதேபோன்று குல்தீப், நல்ல முறையில் பந்து வீசுவார். இதன் மூலம் இந்தியாவை எப்படி நியூசிலாந்து வீரர்கள் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இதனால் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணி குறித்து பாசித் அலி பேசுகையில், "அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 362 ரன்கள் குவித்தார்கள். குறிப்பாக கடைசி பத்து ஓவரில் 110 ரன்கள் எடுத்தார்கள். லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது."
"இதனை பயன்படுத்தி பிலிப்ஸ் மற்றும் டாரல் மிட்செல் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். இது போன்ற ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் நடப்பு தொடரில் விளையாட முடியவில்லை. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் இதுபோன்ற மைதானத்தில் விளையாடினார்கள் என்றால் அவர்களால் இரட்டை சதம் கூட அடிக்க முடியும்."
"எப்போதெல்லாம் ஐசிசி தொடர் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஒரு ஹீரோவாக உருவெடுத்துகிறார். நடப்பு தொடரில் அவர் இரண்டாவது சதம் அடித்திருக்கிறார். அவருடன் இணைந்து விளையாடும் போதெல்லாம் அவருடைய அண்ணன் போல் இருக்கும் வில்லியம்சன் சதம் அடிக்கின்றார்."
" ஒரு சீனியர் வீரர் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதற்கு வில்லியம்சன் சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றார். ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் இன்னிங்ஸ் செல்ல செல்ல வில்லியம்சன் தன்னுடைய ரன் குறிப்பு வேகத்தை அதிகரிக்கின்றார். எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த நான்கு வீரர்கள் பட்டியலில் ரச்சிம் ரவீந்திராவும் இடம் பெறுவார்."
"அதேபோன்று நியூசிலாந்து அணி கேப்டன் சாட்னரும் சிறப்பாக செயல்படுகின்றார். பவுலர்களை அவர் சுழற்சி முறையில் மாற்றுகிறார். தோனி கேப்டன்ஷிப்பில் சாட்னர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார். அங்கிருந்து அவர் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டார் என்று தற்போது தெரிகிறது. துபாயில் நியூசிலாந்து வீரர்கள் 7 பவுலரர்களை பயன்படுத்துகிறார்கள். இது நிச்சயம் நியூசிலாந்துக்கு பலமாக தான் இருக்கும் " என்று பாசித் அலி கூறியுள்ளார்.