துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. ஐசிசி தொடரை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக ஏழாவது ஐசிசி கோப்பையையும் இந்தியா வென்று இருக்கிறது.
கடைசியாக நடைபெற்ற 3 ஐசிசி தொடரிலும் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும்தான் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த சூழலில் இந்தியாவின் வெற்றியால் பல வெளிநாட்டு நாடு ரசிகர்களுக்கு வயிறு எரிகிறது. இதனால் இந்தியாவின் வெற்றியை தரக்குறைவாக பேசும் வகையில் துபாயில் விளையாடியதால் தான் இந்தியா வென்றதாக கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு தற்போது இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சினையை ஆரம்பித்ததே இங்கிலாந்து வீரர்கள் என்பதால் நம்ம நாட்டு பசங்க இங்கிலாந்து வீரர்களை துவம்சம் செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், இந்தியா துபாயில் மட்டும் விளையாடுவதாக இங்கிலாந்து ரசிகர்கள் கூறுகிறார்கள். 2021, 2023 மற்றும் 2025 என 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியும் இங்கிலாந்தில் மட்டுமே நடைபெறுகிறது.
அதை எதிர்த்து இங்கிலாந்து ரசிகர்கள் கேள்வி கேட்பார்களா என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதை போன்று ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முதல் மூன்று தொடரும் இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று கோப்பையை வென்றது. அதையும் இங்கிலாந்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மறந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கும் இந்திய ரசிகர்கள் 96 உலக கோப்பையின் போது இலங்கைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து புள்ளிகளை ஆஸ்திரேலியா இழந்ததாகவும், அதேபோல்தான் தாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று கூறியவுடன் ஐசிசி துபாயில் போட்டியை நடத்தியதாகவும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்லவே அல்லோல் படும் அணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து இரண்டு தொடரை வென்று தங்களது சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதை கங்காரு பாய்ஸ் மறந்து விட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது ஆஸ்திரேலியா 3 அல்லது 4 மைதானத்தில் தான் போட்டிகளில் விளையாடியதாகவும், இந்திய அணி ஒவ்வொரு ஊராக சென்று போட்டியை விளையாடியதை குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள், இதை யாரும் குறை கூறவில்லை என்று பதிலடி தந்துள்ளனர். உலக கிரிக்கெட்டில் இந்தியா தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் வயிற்றெரிச்சல் தாங்காமல் தான் இப்படி பல வெளிநாட்டு ரசிகர்கள் எரியுது மாலா பேனை 12ஆம் நம்பரில் வை என்பது போல் பேசி வருவதாக இந்திய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.