Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வரலாறு படைத்த பும்ரா.. உலகக்கோப்பை பைனலில் மாபெரும் மைல்கல் சாதனை

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மாபெரும் சாதனையை படைத்தார். இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிக முக்கியப் பங்காற்றினார். இந்தப் போட்டியில் அவர் வீசிய அந்தத் துல்லியமான பந்துவீச்சு மட்டுமல்லாமல், அவர் படைத்த சாதனைகளும் தற்போது கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன.

சாதனை முறியடிப்பு

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்கா நீண்ட காலமாகத் தன் வசம் வைத்திருந்தார். அவர் உலகக் கோப்பை தொடர்களில் மொத்தம் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஜஸ்பிரித் பும்ரா அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs NZ Final Jasprit Bumrah Makes History Breaks Lasith Malinga s Long-Standing T20 World Cup Record

தற்போது பும்ரா 26 இன்னிங்ஸ்களில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது பந்துவீச்சு எகானமி 5.66 என்ற அளவில் மிகச் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்தபடியாகத் தென் ஆப்பிரிக்காவின் அன்ரிக் நோக்கியா 38 விக்கெட்டுகளுடனும், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.

இறுதிப் போட்டியில் மிரட்டல் பந்துவீச்சு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் பும்ரா வீசிய 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மேட் ஹென்றி ஆகிய நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் மிகச் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன் எந்த வேகப்பந்து வீச்சாளரும் இறுதிப் போட்டியில் இவ்வளவு குறைவான ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் (4 விக்கெட்டுக்கு 12 ரன்கள்) மட்டுமே பும்ராவை விடச் சிறந்த பந்துவீச்சை இறுதிப் போட்டியில் பதிவு செய்துள்ளார்.

விக்கெட் வேட்டைக்காரன்

இந்த 2026 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் பும்ரா மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். இறுதிப் போட்டியில் எடுத்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து, இந்தத் தொடரில் அவர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் நடப்புத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சக வீரர் வருண் சக்கரவர்த்தியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வருண் சக்கரவர்த்தியும் இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களால் 255 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி பும்ராவின் வேகத்தில் நிலைகுலைந்து 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Story first published: Monday, March 9, 2026, 7:05 [IST]
Other articles published on Mar 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+