For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பிளேயிங் 11இல் அந்த தவறை மட்டும் செய்யவே மாட்டேன்”.. ரோஹித் சர்மா கறார்.. குல்தீப் நிலை என்ன?

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்குமா? குல்தீப் யாதவ் கடந்த இரண்டு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் சற்று அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது இந்திய அணிக்கு ஆபத்தானதாக முடியலாம் என்ற ஒரு சந்தேகம் உள்ளது.

அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4 போட்டிகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 40 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

IND vs NZ Final Playing XI Will Kuldeep Yadav be Dropped from India s Champions Trophy Final XI


ஆனால், அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 9.3 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார் குல்தீப் யாதவ். அந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரு ஓவருக்கு சராசரியாக அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் அவர்தான். மற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் குறைவாக ரன்களை விட்டுக் கொடுக்கும் நிலையில் குல்தீப் யாதவ் மட்டும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார்.

அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் அது தொடர்ந்தது. அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 44 ரன்களை கொடுத்து இருந்தார். இது மோசமான செயல்பாடு என சொல்ல முடியாவிட்டாலும், அந்த போட்டியில் அவருக்கு விக்கெட்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இருந்தால் அது இந்திய அணிக்கு பவர் பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற ஒரு பார்வை உள்ளது. ஆனால், இதுவரை நான்கு ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணி கடைசி இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு தரமான அணிகளை வீழ்த்தி உள்ளது.

மீண்டும் நியூசிலாந்து அணியைத்தான் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவை நீக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவை சேர்ப்பது சரியாக இருக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா நிச்சயமாக வெற்றிகளை அளித்து வரும் பிளேயிங் லெவனை மாற்ற மாட்டேன் என்ற ஒரு கொள்கையுடன் இருக்கிறார். இதே கொள்கையைத்தான் அவர் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும், 2024 டி20 உலகக் கோப்பையிலும் கடைபிடித்தார்.

குல்தீப் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இதற்கு முந்தைய காலங்களில் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னராக இருந்ததை மனதில் வைத்து ரோஹித் சர்மா நிச்சயமாக அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கலாம். இதை தவிர்த்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி.

Story first published: Sunday, March 9, 2025, 6:20 [IST]
Other articles published on Mar 9, 2025
English summary
IND vs NZ Final Playing XI: Will Kuldeep Yadav be Dropped from India's Champions Trophy Final XI?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+