Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ஒன்னு ஹீரோ, இல்லனா வில்லன்! சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த தொடரில் பெரிய அளவு பேட்டிங் செய்ய ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

எனினும் ஜடேஜா தனது பௌலிங் மற்றும் பில்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் இரண்டு விக்கெட்டும், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டிகள் ஒரு விக்கெட்டும் என மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

இந்த நிலையில் ஜடேஜா பவுண்டரி அடித்து தான் இந்திய அணி கோப்பையில் வென்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜடேஜா, பேட்டிங் வரிசையில் நான் களமிறங்கும் இடம் ஒன்று என்னை ஹீரோவாக்கும். இல்லை என்றால் என்னை வில்லன் ஆக்கும். இறுதிப்போட்டியில் பரபரப்பான கட்டத்தில் கே எல் ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் பார்ட்னர்ஷிப் சேர்த்து சிறப்பாக விளையாடினார்கள்.

என்னைக் கேட்டால் அதுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று கூறுவேன். மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய பெரிய அளவு கை கொடுக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டுக்காக கோப்பையை வெல்வது என்பது என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.

இது போன்ற தொடர்களில் விளையாட முடியாமல் போனால் மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு தொடர்களிலும் நான் நல்ல உடல் தகுதியுடன் இருந்து கோப்பையை வென்று இருக்கிறேன் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார். ஜடேஜா இந்திய கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தாலும் 2011 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறாத சூழல் ஏற்பட்டது. எனினும் 2013, 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறார். இந்த சூழலில் ஜடேஜா ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து விளையாட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Monday, March 10, 2025, 10:00 [IST]
Other articles published on Mar 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+