Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ Final: இந்திய அணியில் சர்ப்ரைஸ் இல்லை ஆனா நியூசிலாந்து அணியில்.. பிளேயிங் 11 ட்விஸ்ட்!

அகமதாபாத்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2026 டி20 இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

IND vs NZ Final Toss and Playing XI Can Suryakumar Yadav Lead India to a Historic Third T20 World Cup Title

டாஸ் வென்ற சாண்ட்னர் முடிவு

டாஸ் வென்ற பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தயக்கம் ஏதுமின்றி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிவதாகவும், முதலில் பந்துவீசி இந்திய அணியைக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இது ஒரு மிகப்பெரிய மேடை என்றும், அரையிறுதி வெற்றி அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோல் மெக்கன்சிக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி பதில்

டாஸ் இழந்தாலும், முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியே என்று இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அரையிறுதிப் போட்டி மற்றும் கடந்த கால வரலாறுகள் முடிந்துவிட்டன என்றும், இது புதியதொரு உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். நாக் அவுட் போட்டிகளில் முதலில் ரன்களைக் குவித்துவிட்டுப் பந்துவீசுவது அணிக்குச் சாதகமான விஷயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் விளையாடிய அதே வெற்றி கூட்டணி இன்றும் களமிறங்குகிறது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா அல்லது வருண் சக்கரவர்த்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னாள் வீரர்கள் மத்தியில் எழுந்து இருந்தது. ஆனால், அப்படி என்ற அதிரடி மாற்றமும் இந்திய அணியில் நடக்கவில்லை.

நியூசிலாந்து வியூகம்

நியூசிலாந்து அணியின் தேர்வில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த அணியில் முன்னணி ஆஃப் ஸ்பின்னர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்திய அணியின் தொடக்க வரிசையில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அவர்களைக் கட்டுப்படுத்த ஆஃப் ஸ்பின்னர் தேவைப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சை நம்பி களமிறங்கியுள்ளது. இது இந்தியத் தொடக்க வீரர்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்கள் விவரம்:

இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து அணி: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி.

Story first published: Sunday, March 8, 2026, 18:34 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+