For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி அடுத்த ஐசிசி தொடர் எப்போது? 2031ஆம் ஆண்டு வரை எந்த ஐசிசி தொடரை எந்த நாடு நடத்துகிறது.. விவரம்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா வந்த பிறகு ஐசிசி தொடரில் இந்திய அணி பல பிரமிக்க தக்க வெற்றிகளை பெற்று வருகிறது. 2023 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் ஃபைனலில் ஆஸ்திரேலிய விடம் தோல்வியை தழுவியது.

அதன் பிறகு 2024 டி20 உலக கோப்பையையும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையையும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் கோப்பையை கைப்பற்றியது.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

இந்த தருணத்தில் இனி அடுத்த ஐசிசி தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்பதை தற்போது பார்க்கலாம்.இனி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது.
இதனைத் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மீண்டும் இங்கிலாந்தில் நடத்தப்படுகிறது.

2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதனைத் தொடர்ந்து 2028 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.இந்த தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

2029 ஆம் ஆண்டு மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துகிறது. 2030 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடத்தப்படுகிறது. இதனை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதைத்தொடர்ந்து 2031 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இணைந்து நடைபெறுகிறது.

Story first published: Monday, March 10, 2025, 20:52 [IST]
Other articles published on Mar 10, 2025
English summary
Ind vs NZ Final - When and where will Next ICC Tournaments will happen- full list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+