Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

92 ஆண்டுகளில் இல்லாத தோல்வி.. கம்பீரை தூக்கிவிட்டு, பயிற்சியாளராக இந்த ஜாம்பவானை கொண்டு வாருங்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முழுமையாக தோல்வியை தழுவி 91 ஆண்டுகளில் பெறாத ஒரு மோசமான சரித்திரத்தை படைத்து விட்டது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலக வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பிசிசிஐயின் தலைவராக கங்குலி இருந்த போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் டி 20க்கு என இரண்டு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு முடிவை கொண்டு வந்தார்.

ind vs nz gautam gambhir rohit sharma virat kohli

ஒருநாள், டி 20 கேப்டனாக ரோகித் சர்மாவும் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு நாள் போட்டியில் இருந்து கேப்டன் பதவியில் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டதை எடுத்து டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விராட் கோலி ராஜனாமா செய்து கொண்டார்.தற்போது இதையே சுட்டிக் காட்டும் ரசிகர்கள் டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சி ஆளையும் கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை பேட்ஸ்மேனாக இருந்தபோதே ஏற்படுத்தியது கிடையாது. இதனால் கம்பீர் எப்படி டெஸ்ட் அணிக்கு பயிற்சி தருவார் என்று பலரும் அப்போதே கேள்வி எழுப்பினார்கள். கேப்டன் பதவியில் இருக்கும் ரோகித் சர்மாவே தங்களுக்கு ராகுல் டிராவிட் தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ind vs nz gautam gambhir rohit sharma virat kohli

ஆனால் ராகுல் டிராவிட் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் கம்பீரை, டி20 மற்றும் ஒரு நாள் போட்டியின் தலைமை பயிற்சியாளராக வைத்துவிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் லட்சுமனை இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கம்பீரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்ஷ்மன் தனக்கென ஒரு பெயரை பெற்றிருக்கிறார். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் வல்லவர். இதனால் லக்ஷ்மன் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணியின் இளம் வீரர்கள் சுழல் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை நன்கு கற்றுக் கொள்வார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, November 3, 2024, 14:56 [IST]
Other articles published on Nov 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+