IND vs NZ - இந்தியா தடுமாறிய போது, நியூசிலாந்து மட்டும் ரன் குவிப்பது எப்படி? பிட்ச் மாறியதா? விவரம்
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆடுகளம் மோசமாக இருந்ததால்தான் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறது. இதனால் நியூசிலாந்து அணி குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நியூசிலாந்து அணி ஈடுபட்டு வருகிறது. பெங்களூரில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக தவறான முடிவை எடுத்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி அபாரமாக பந்து வீசி 46 ரன்களில் இந்தியாவை சுருட்டியது. இந்த நிலையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்தியாவும் அபாரமாக செயல்பட்டு நியூசிலாந்து விக்கெட்டை எளிதில் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வருகிறது.
47 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட நியூஸிலாந்து 128 ரன்கள் அதிகமாக அடித்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் தான். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் பெங்களூர் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது.
இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் முதல் ஒரு மணி நேரம் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதில் இந்தியா பொறுப்புடன் நிதானமாக விளையாடி இருந்தால் ஒரு அளவுக்கு தாக்குப்பிடித்து அதன் பிறகு ரன்களை சேர்த்திருக்கலாம்.
ஆனால் இந்திய அணி வீரர்கள் சில விக்கெட்டுகளை இழந்தவுடன் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் தேவையில்லாத ஷார்ட் அடி நியூசிலாந்தின் அபார பில்டிங்கால் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இந்திய அணி 31 ஓவர் விளையாடிவிட்டதால், அதன் பிறகு ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் காய்ந்து விட்டது. அது மட்டும் இல்லாமல் சூரியனுக்கு அவ்வப்போது எட்டிப் பார்க்க ஆடுகளத்தில் இருந்த அபாயம் முற்றிலும் நீங்கி விட்டது.
இதன் காரணமாக தான் இந்தியா பந்து வீசும் போது அவ்வளவு அபாயகரமாக இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நியூசிலாந்து அணி பந்துவீசும் போது ஒரு சுழற் பந்துவீச்சாளர் கூட பயன்படுத்தவில்லை. காரணம் அப்போது ஆடுகளம் முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தற்போது ஆடுகளம் நன்றாக காய்ந்து விட்டதால் தற்போது இந்திய அணி அதிக அளவில் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருகிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதை அடுத்து தற்போது நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது இதனால் ரோகித் சர்மா டாசின் போது தவறான முடிவு எடுத்து விட்டதாக ரசிகர்கள் குறை கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications