Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவை தொடரும் சாபம்.. 8 இன்னிங்ஸில் ஒரேயொரு அரைசதம்.. ஒரு கேப்டன் இப்படியா அவுட் ஆகுறது!

புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பொறுப்புடன் ஆட வேண்டிய ரோஹித் சர்மா மோசமான ஷாட்டில் ஆட்டமிழந்திருப்பது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய இன்னிங்ஸின் முதல் ஒரு மணி நேரத்திற்குள் நியூசிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. இதனால் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ind vs nz rohit sharma gautam gambhir


இதுவரை இந்திய மண்ணில் 300 ரன்களுக்கு மேல் ஒரேயொரு முறை மட்டுமே இந்திய அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதனால் வரலாற்று வெற்றியை நோக்கிய பயணம் என்பதால், சீனியர் வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டிய தேவை எழுந்தது. அதேபோல் தொடக்கமும் அபாரமாக இருக்கும் போது, மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்களுக்கும் நம்பிக்கை வரும்.

அந்த வகையில் ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது பந்திலேயே ஜெய்ஸ்வால் அபாரமாக சிக்ஸ் அடித்து தொடங்கினார். மறுமுனையில் ரோஹித் சர்மா நன்றாக தொடங்கினார். சான்ட்னரை சமாளிப்பதற்கான திட்டத்துடன் ரோஹித் சர்மா களமிறங்கியதும் கண்கூடாக தெரிந்தது. ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டெல்லாம் முயற்சித்து ரன்களை சேர்த்தார்.

ஆனால் சான்ட்னர் பந்தில் டிஃபென்ஸ் ஆட ரோஹித் சர்மா தடுமாறியதை கணித்தனர். இதனால் பந்தின் லெந்தை கொஞ்சம் ஷார்ட்டாக வைக்க, அதனை டவுன் தி டிராக் இறங்கி வந்து ரோஹித் சர்மா டிஃபென்ஸ் ஆட, அது நேராக ஷார்ட் லெக் திசையில் நின்ற வில் யங்கிடம் கேட்சானது. இந்த ஷாட்டில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வெறும் 8 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேறினார்.


ஏற்கனவே புனே மைதானத்தில் 10 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் ரோஹித் சர்மா தவித்து வந்தார். தற்போது 11வது இன்னிங்ஸிலும் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடைசி 8 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 26, 2024, 11:42 [IST]
Other articles published on Oct 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+