Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ரோஹித் சர்மாவால் இந்திய அணிக்கு பாதிப்பு? தப்பிக்க ஒரே வழி இதுதான்.. சிக்கலில் கேப்டன்

பெங்களூரு: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளையும் வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. இல்லையெனில் அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு ரோஹித் சர்மாவே காரணமாக இருப்பார்.

அதன் காரணமாகவே நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்தியா, அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது.

ind vs nz india rohit sharma

இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களுடன் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எட்டு முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

இந்த இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது. அவர் சொந்த காரணங்களால் விலக உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தை 99 சதவீதம் உறுதி செய்துவிடும்.

அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அழுத்தம் இன்றி விளையாடலாம். ரோஹித் சர்மா இல்லாத போது அது மற்ற இந்திய வீரர்களுக்கு இலகுவாக இருக்கும். எனவே தான் தன்னால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தத்துடன் இருக்கிறார்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, இரண்டிலும் தோல்வி அடைந்து இருப்பதால் இந்திய அணியும் அதேபோல நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, October 15, 2024, 10:32 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+