Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு?

நாக்பூர்: இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை நாக்பூர் நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், டி20 தொடரை கைப்பற்ற வேண்டிய உத்வேகத்துடன் சூரியகுமார் யாதவ் தலைமையில் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இது நல்ல பயிற்சி களமாக இரு அணிகளுக்கும் அமையும். இந்த சூழலில் டி20 உலக கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சன், இஷான் கிசன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Ind vs NZ

திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் முதல் மூன்று டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். கில் இல்லாததால் தற்போது சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க வீரராக திரும்பி இருக்கிறார்.

இதன் மூலம் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க ஜோடியாக விளையாடுவார்கள். மூன்றாவது வீரராக இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்க கூடும். தற்போது திலக் வர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் அல்லது இசான் கிஷன் போட்டி போடுவார்கள். ஐந்தாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

ஆறாவது இடத்தில் இந்திய அணியின் ஸ்டார் வீரரான ரிங்கு சிங் களமிறங்க கூடும். ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான அக்சர் பட்டேல் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது இடத்தில் சிவம் துபே விளையாட அதிக வாய்ப்பு இருக்கின்றது. ஒன்பதாவது இடத்தில் ஆர்ஸ்தீப் சிங்கும், பத்தாவது இடத்தில் பும்ராவும் விளையாட கூடும். 11 வது இடத்தில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க கூடும். ஒருவேளை இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் ஆர்ஸ்தீப் சிங் பதில் குல்தீப் யாதவை சேர்க்க வாய்ப்பு இருக்கும்.

இந்திய அணி பிளேயிங் லெவன்: 1.அபிஷேக் ஷர்மா, 2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 3. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 4. ஷ்ரேயாஸ் ஐயர்/இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்டியா, 6. அக்சர் படேல், 7. ரிங்கு சிங், 8. ஹர்ஷித் ராணா/ஷிவம் துபே, 9. அர்ஷ்தீப் சிங்/குல்தீப் யாதவ், 10. ஜஸ்பிரித் பும்ரா, 11. வருண் சக்கரவர்த்தி.

Story first published: Tuesday, January 20, 2026, 10:13 [IST]
Other articles published on Jan 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+