IND vs NZ- 6 இன்னிங்சில் ஒவ்வொரு இந்திய வீரர்களின் செயல்பாடுகள்.. தோல்விக்கு காரணமே இது தான்
மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முழுமையாக தோல்வியைத் தழுவி மோசமான சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சாதிக்காததே காரணம். ரிஷப் பண்டை தவிர மற்ற எந்த வீரர்களுமே மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை.
சர்பிராஸ் கான் முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்த நிலையில் மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கடுமையாக சொதப்பினார். ரோகித் சர்மா,விராட் கோலி ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் போனதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகளை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிஷப் பண்ட், 3 டெஸ்டில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 261 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜெய்ஸ்வால் ஆறு இன்னிங்ஸில் 190 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 31 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 77 ஆகும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை சர்பராஸ் தான் பிடித்திருக்கிறாராம்.
இதில் அவர் ஆறு இன்னிங்ஸில் மொத்தமாக 171 அடித்து இருக்கிறார். இதில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 150 ஆகும். மற்ற ஐந்து இன்னிங்ஸ்களிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் கில் இருக்கிறார். இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு இன்னிங்ஸில் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு அரை சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஜடேஜா இருக்கிறார். மூன்று டெஸ்டில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 105 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 42 ரன்கள் ஆகும்.ஆறாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். 6 இன்னிங்ஸில் 93 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும்.
ஏழாவது இடத்தில் ரோகித் சர்மா மூன்று டெஸ்டில் ஆறு இன்னிங்சில் 91 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 52 ரன்கள் ஆகும். இப்படி இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் மட்டும்தான் 200 ரன்னுக்கு மேல் அடித்திருக்கிறார்கள்.மற்ற பெரிய வீரர்கள் யாரும் 100 ரன்கள் கூட தொடாமல் இருந்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications