Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்திய அணியில் புவனேஷ்வரை எடுத்ததே தப்பு".. தேர்வுக்குழுவை கிழித்துத் தொங்கவிட்ட இர்பான் பதான்

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரைத் தேர்வு செய்து விளையாட வைத்தது இந்திய தேர்வுக்குழு செய்த மிகப்பெரிய தவறு என்று முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹாமில்டனில் நடைபெற்ற 5-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய புவனேஷ்வர் குமார், விக்கெட் எதுவும் எடுக்காமல் 41 ரன்களை வாரி வழங்கினார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய அவர், வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து 11.25 எகானமி ரேட்டுடன் படுமோசமாகச் செயல்பட்டார்.

IND vs NZ Irfan Pathan Criticizes Selection Committee Over Bhuvneshwar Kumar s Selection in NZ T20I Series

இது தொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிய இர்பான் பதான், "தேர்வுக்குழு எங்கே தவறு செய்தது என்று பார்த்தால், புவனேஷ்வர் குமாரை இந்தத் தொடரில் ஆட வைத்ததுதான் பெரும் தவறு. புவனேஷ்வர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சீனியர் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவரது திறமை மீதும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போதைக்கு டி20 உலகக் கோப்பை அருகில் கூட இல்லை. அப்படி இருக்கும்போது அவரை இந்தத் தொடரில் ஆட வைத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு அவரை தயார்படுத்த நினைத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்" என்றார்.

இளம் வீரர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், "புவனேஷ்வரை ஆட வைத்ததன் மூலம் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளருக்குக் கிடைக்க வேண்டிய அனுபவ வாய்ப்பு பறிபோய்விட்டது. அவருக்குப் பதில் மயங்க் யாதவ் அல்லது பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்திருக்கலாம். நியூசிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடி அனுபவம் பெறும் சிறந்த வாய்ப்பை இளம் பவுலர்கள் இழந்துவிட்டனர்" என்று ஆதங்கப்பட்டார்.

வரலாறு படைத்த நமீபியா கிரிக்கெட் அணி.. 20 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஒருநாள் தொடர் வெற்றி

வரலாறு படைத்த நமீபியா கிரிக்கெட் அணி.. 20 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஒருநாள் தொடர் வெற்றி

"புவனேஷ்வர் குமார் சரியாக செயல்படவில்லை என்பதற்காக இதை நான் கூறவில்லை. அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு இளம் பந்துவீச்சாளருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருந்திருக்குமா? என்பதே எனது கேள்வி" என்று தேர்வுக் குழுவை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் பதான்.

Story first published: Monday, November 2, 2026, 8:10 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+