Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வரலாறு படைத்த இஷான் கிஷன்.. டி20யில் ஒரே ஆண்டில் சூர்யகுமார் செய்த ரெக்கார்டை உடைத்தார்

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் செய்தார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக, 2022-ம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 31 போட்டிகளில் அடித்த 1,164 ரன்களே ஒரு காலண்டர் ஆண்டின் இந்திய சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்க இஷான் கிஷனுக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தப் போட்டியில் அவர் தான் சந்தித்த 4-வது பந்திலேயே 6 ரன்களை எடுத்து புதிய வரலாறு படைத்தார்.

IND vs NZ Ishan Kishan Breaks Suryakumar Yadav s Record for Most T20I Runs by an Indian in a Calendar Year

இப்போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இஷான் கிஷன் அபாரமாக ஆடி 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 2026-ம் ஆண்டில் இதுவரை 37 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் மொத்தம் 1,220 ரன்களைக் குவித்து சூர்யகுமார் யாதவின் சாதனையை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். நடப்பாண்டில் அபிஷேக் சர்மா 1,153 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 809 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், உலக அளவில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார் இஷான் கிஷன்.

ஹாமில்டனில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அனல் பறக்கும் எதிர்த்தாக்குதலை செய்தது.

IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் 11இல் நீண்ட நாட்கள் கழித்து தமிழக பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் 11இல் நீண்ட நாட்கள் கழித்து தமிழக பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

நாதன் ஸ்மித் மற்றும் பிளேர் டிக்னர் வீசிய ஓவர்களில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர். காயம் காரணமாக இந்தத் தொடரின் நடுவே 2 போட்டிகளில் ஆட முடியாமல் தவித்த இஷான் கிஷன், கடைசி போட்டியில் 61 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்து இருக்கிறார்.

100 சதம் அடித்த சச்சினால் உலகின் முதல் மைதானத்தில் செஞ்சுரி அடிக்கவே முடியவில்லை.. எது தெரியுமா?

Also Read

100 சதம் அடித்த சச்சினால் உலகின் முதல் மைதானத்தில் செஞ்சுரி அடிக்கவே முடியவில்லை.. எது தெரியுமா?
Story first published: Sunday, November 1, 2026, 13:46 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+