Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இடுப்பில் ஏற்பட்ட காயம்.. கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு?

மும்பை: இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. இதில் முதற்கட்ட போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் நியூசிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்கு பின், டிம் சவுதி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

ind vs nz kane williamson rohit sharma

கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணி பின்னடைவை சந்தித்து வரும் சூழலில், இந்திய அணிக்கு எதிரான மிக முக்கியமான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அக்.16ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும், அக்.24ஆம் தேதி புனே மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியும், நவ.1ஆம் தேதி மும்பையில் 3வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது.

இதற்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிரான முதற்கட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போதே கேன் வில்லியம்சன் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியடைந்தார்.

இதற்காக சிகிச்சையை கேன் வில்லியம்சன் எடுத்து வந்த நிலையில், மருத்துவர்கள் தரப்பில் ஓய்வில் இருப்பதே சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் தேர்வு குழுவும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், வில்லியம்சனை முதல் போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக இளம் நட்சத்திர வீரரான மார்க் சாப்மேனை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.

மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். 2020ஆம் ஆண்டு இந்திய அணி ஏ அணிக்கு எதிராக விளையாடிய போது, மிகச்சிறந்த ஆட்டத்தில் இந்திய மண்ணில் வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் பிரேஸ்வெல், 2வது குழந்தை பிறப்புக்காக முதல் போட்டிக்கு பின் நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இடத்தில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இஷ் சோதி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக டாம் லேதம் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் தொடரிலேயே பல்வேறு சிக்கல் வந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நியூசிலாந்து அணி சமாளிக்குமா என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம்: டாம் லேதம், டாம் பிளெண்டெல், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கான்வே, மேட் ஹென்ரி, டேரல் மிட்சல், வில் ஓ'ரோர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி, டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங்.

Story first published: Wednesday, October 9, 2024, 10:21 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+