Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ Final: சாம்பியன்ஸ் டிராபியை நாங்கள் வென்றதுக்கு பிசிசிஐ தான் காரணம்.. கேஎல் ராகுல் கருத்து

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிகள் நான்கு விக்கெட்டுகள் வித்யாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

இதன் மூலம் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 12 ஆண்டுகள் கழித்து இந்த கோப்பையை வென்றுள்ளது. வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ராகுல், "நான் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நம்பிக்கையுடன் தான் இருந்தேன்."

Champions Trophy 2025 IND vs NZ Final KL Rahul Rohit sharma

"ஏனென்றால் எனக்கு பிறகு இரண்டு பேட்டர்ஸ் இருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் கவனத்துடன் களத்தில் நின்று விளையாடினேன். அதுதான் மிகவும் முக்கியம். போட்டியை முடித்து வைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இம்முறை நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்."

"இதேபோன்று ஒரு சூழலில் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் நான் விளையாடி விட்டேன். என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்."

"நாங்கள் கிரிக்கெட் விளையாட பேட்டை எடுத்த போது எங்களுக்கு நெருக்கடியும் அழுத்தமும் இருக்கும் என்று தெரியும். நாங்கள் தொழில் முறை கிரிக்கெட் வீரராக விளங்கி வருகின்றோம். நாங்கள் தொடர்ந்து ஐசிசி கோப்பையை வென்றதற்கு காரணம் பிசிசிஐ தான். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது எங்களை சரியான முறையில் அவர்கள் மெருகேற்றி வருகிறார்கள்."

"எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டிகளும் சவால்களும் சந்தித்து வருகின்றோம். பிசிசிஐ எங்களது நாட்டின் கிரிக்கெட்டை சிறப்பாக வளர்த்து வருகிறது இதனால் தான் ஒவ்வொரு இளம் வீரர்களும் எந்த அழுத்தத்தையும் சமாளித்து வரக்கூடிய திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கே எல் ராகுல் கூறியுள்ளார்.

Story first published: Sunday, March 9, 2025, 22:10 [IST]
Other articles published on Mar 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+