For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ- ராகுலுக்கு நடந்தது அநியாயத்தின் உச்சம்!ரோகித்,கோலியை சேர்த்தாலும், அதிக ரன் அடித்த ராகுல்

மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதற்கு காரணம் கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சர்பராஸ் கான் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பது வேறு கதை.

ind vs nz rohit sharma virat kohli gautam gambhir


இந்த தருணத்தில் கே எல் ராகுல் சரியாக ரன்கள் அடிக்கவில்லை என்ற காரணத்தால் அவர் நீக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து கடந்த 10 டெஸ்ட் இன்னிங்சில் அடித்த ரன்களை விட கே எல் ராகுல் தனி ஆளாக பத்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதாவது விராட் கோலியும், ரோகித் சர்மாவுமே இணைந்து கடந்த 10 டெஸ்ட் இன்னிங்சில் 325 ரன்கள் தான் அடித்திருக்கிறார்கள். ஆனால் கே எல் ராகுல் தனி ஆளாக கடந்த 10 இன்னிங்ஸில் 339 ரன்கள் அடித்திருக்கிறார்.இதன் மூலம் ராகுல், கோலி தனித்தனியாக அடித்த ரன்களை விட கேஎல் ராகுல் அபாரமாக அடித்திருக்கிறார். எனினும் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அணியிலிருந்து தூக்கப்படாமல் கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் கேஎல் ராகுலுக்கு அநியாயம் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால்தான் பிசிசிஐ விளம்பரத்திற்காக இருவரையும் அணியை விட்டு நீக்காமல் பாதுகாத்து வருவதாகவும், கே எல் ராகுலுக்கு ரசிகர்கள் குறைவாக இருப்பதால் அவரை அதிரடியாக நீக்கி இருப்பதாகவும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக ரசிகர்கள் இருக்கும் வீரர்களை அணியில் வைப்பதற்கு பதில் நன்றாக யார் விளையாடுகிறார்களோ அவர்களை அணியில் வையுங்கள் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கே எல் ராகுல் வங்கதேசத்துக்கு எதிராக கான்பூர் டெஸ்ட் போட்டியில் 68 ரன்கள் விளாசி இருந்தார். ஆனால் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்.இதனால் ராகுலை நீக்கியதற்கு பதில் விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவை தான் அணியை விட்டு நீக்கி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, November 4, 2024, 12:41 [IST]
Other articles published on Nov 4, 2024
English summary
IND vs NZ- KL Rahul scored more runs than Rohit and kohli combined in last 10 innings ராகுலுக்கு நடந்தது அநியாயத்தின் உச்சம்!ரோகித்,கோலியை சேர்த்தாலும், அதிக ரன் அடித்த ராகுல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+