Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- கேஎல் ராகுல் அணியில் இருக்கனும்.. ஒரு தோல்வியால் பதற்றம் அடைய வேண்டாம்.. EX வீரர் கருத்து

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதற்கு காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல், முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் ஆட்டம் இழந்தது தான்.

இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் கே எல் ராகுல் ஒரு அரை சதம் அடித்திருந்தால், நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற அல்லது போட்டியை டிரா செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதன் காரணமாக 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

ind vs nz kl rahul rohit sharma sarfaraz khan

இந்த சூழ்நிலையில் கேல் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடபதி ராஜு இந்திய அணியின் பிளேயிங் லெவனை எக்காரணம் கொண்டு மாற்றக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் என்னுடைய பிளேயிங் லெவனை நான் மாற்றி இருக்க மாட்டேன். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனை இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வைத்திருப்பேன். நடு வரிசையில் கே எல் ராகுல் போன்ற அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்க வேண்டும்.

ஒரு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக கே எல் ராகுலை அணியை விட்டு நீக்க கூடாது. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக அவர் இருக்கிறார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் போட்டிகளிலும் கே எல் ராகுல் விளையாட வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும். ஒரு தோல்வியின் காரணமாக பதற்றம் அடைந்து அணியின் பேலன்ஸை மாற்றி விடக்கூடாது.

இந்தியா இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தான் இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் ரோகித் சர்மா நேர்மறையான கேப்டனாக இருக்கிறார். இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்று வெங்கடாபதி ராஜு கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 22, 2024, 9:58 [IST]
Other articles published on Oct 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+