Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப், வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து பெஞ்ச்.. காரணம் என்ன? இந்திய அணியின் ஸ்பின் கோச் விளக்கம்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு தொடர்ந்து ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே வெளிப்படையான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் 259 ரன்களை வாரி வழங்கினர். இதனால் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இத்தகைய சூழலிலும் குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரு முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களும் களமிறக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இனி இந்திய அணியில் தனிப்பட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் வேண்டாம், நமன் திர் போன்ற ஆல்-ரவுண்டர்களே போதும் என்ற முடிவுக்கு பயிற்சியாளர் கம்பீர் வந்து விட்டாரா? என்ற கேள்வி எழுந்தது.

IND vs NZ Kuldeep Yadav and Varun Chakaravarthy Benchedl Bowling Coach Sairaj Bahutule Explains Strategy

இந்த நிலையில் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே, "குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி போட்டிகளில் களமிறங்க முழு உடற்தகுதியுடன் தயாராக உள்ளனர். ஆனால் அணியின் காம்பினேஷன் மற்றும் ஆடுகளத் தேவையைப் பொறுத்து சில நேரங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இந்த எதார்த்தத்தை இருவரும் நன்கு உணர்ந்துள்ளனர். திரைக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அணி நிர்வாகம் அழைக்கும் போது சிறப்பாக செயல்பட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அக்சர் படேல் பவர்பிளே ஓவர்களிலேயே துல்லியமாக வீசக்கூடியவர். அதே சமயம் குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் ஆட்டத்தின் எந்தப் பகுதியிலும் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர்கள். அடுத்த ஹாமில்டன் டி20 போட்டியிலோ அல்லது அடுத்து வரும் ஒருநாள் தொடரிலோ அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல் அபிஷேக் சர்மாவும் வலைப் பயிற்சியில் தொடர்ந்து பந்துவீசி வருகிறார். தேவைப்பட்டால் கேப்டன் முடிவெடுத்து அவரையும் பந்துவீச அழைப்பார்" எனக் கூறினார்.

இந்தியா தொடர்ந்து 3 தோல்விகள்.. இங்கிலாந்திடமும் வீழ்ந்து படுமோசமான நிலைக்குச் சென்றது

இந்தியா தொடர்ந்து 3 தோல்விகள்.. இங்கிலாந்திடமும் வீழ்ந்து படுமோசமான நிலைக்குச் சென்றது

ஆக்லாந்து மைதானத்தின் எல்லைகள் சிறியதாக இருந்ததும், திட்டங்களை பவுலர்கள் சரியாகச் செயல்படுத்தாததுமே 4-வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் என்று கூறிய பஹுதுலே, ஹாமில்டனில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்து சரியான பந்துவீச்சு கூட்டணியைத் தேர்வு செய்வோம் எனத் தெரிவித்தார்.

Story first published: Saturday, October 31, 2026, 11:37 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+