Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியாவிடம் தொடரை இழந்த கையோடு நியூசிலாந்துக்கு அடுத்த அடி.. முக்கிய வீரர் விலகல்

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை பறிகொடுத்த சோகத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கு, அடுத்தடுத்து பலத்த பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக எஞ்சிய டி20 தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியின் போது பெர்குசனுக்கு வலது கால் தசையில் தீவிர வலி ஏற்பட்டது. இதன் காரணமாக வெலிங்டனில் நடந்த 3-வது போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது. இந்நிலையில், காயம் குணமடையாததால் எஞ்சிய 2 போட்டிகளிலும் பெர்குசன் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரராக மேட் ஃபிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs NZ Lockie Ferguson Ruled Out of Remaining India T20Is Due to Injury Penalty for New Zealand

நியூசிலாந்து அணி ஏற்கனவே முன்னணி பந்துவீச்சாளர் மேட் ஹென்றியை காயம் காரணமாக இழந்திருந்தது. அவரும் 2-வது போட்டியின் போதே தொடை தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார். மற்றொரு முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனுக்கு பணிச்சுமை காரணமாக எஞ்சிய டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னணி பந்துவீச்சாளர்கள் மூவர் இன்றி நியூசிலாந்து அணி பலவீனமடைந்துள்ளது.

நியூசிலாந்து ஏ அணியில் விளையாடி வந்த மேட் ஃபிஷர் சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பணிச்சுமை மற்றும் ஒருநாள் தொடருக்கு தயார் ஆவதன் காரணமாக விடுவிக்கப்பட்ட ஜேமிசன், உள்நாட்டுப் போட்டிகளில் ஆடிவிட்டு அடுத்த வாரம் தொடங்கும் ஒருநாள் அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர் பவுலிங் செய்ததை பார்த்தால்..” .. புவனேஸ்வர் குமார் பற்றி அஸ்வின் சொன்ன கசப்பான உண்மை

“அவர் பவுலிங் செய்ததை பார்த்தால்..” .. புவனேஸ்வர் குமார் பற்றி அஸ்வின் சொன்ன கசப்பான உண்மை

வீரர்களின் காயம் குறித்து பேசிய நியூசிலாந்து பயிற்சியாளர் ராப் வால்டர், முக்கிய தருணத்தில் வீரர்கள் காயமடைவது வேதனை அளிப்பதாகவும், அடுத்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹென்றி மற்றும் பெர்குசன் முழு உடற்தகுதியுடன் திரும்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Story first published: Thursday, October 29, 2026, 9:50 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+